விருசாபாவதி ஆறு
விருசாபாவதி ஆறு (Vrishabhavathi River) என்பது கர்நாடகாவில் ஓடும் சிறிய நதியாகும். ஆர்காவதி ஆற்றின் துணை நதியான இது இந்திய நகரமான பெங்களூரின் தெற்குப் பகுதியில் பாய்கிறது.[1] இந்த பழமையானது நதியின் நீர் குடிப்பதற்கும், புகழ்பெற்ற காளி ஆஞ்சநேயர் கோயிலுக்கும் பயன்படுத்தப்பட்டது.[2] சொற்பிறப்பியல்விருசாபாவதி என்பது சமசுகிருத வார்த்தையான விருஷபாவிலிருந்து வந்தது. விருஷபா என்பது காளையைக் குறிக்கிறது. பசவனகுடியில் உள்ள பெரிய காளை கோயிலில் உள்ள ஒற்றைக்கல் நந்திச் சிலையின் அடிவாரத்தில் இந்த நதி தோன்றியதாக நம்பப்படுகிறது. எனவே இதற்கு விருஷபாவதி என்று பெயர் வந்தது.[3] ஆற்றோட்டம்இந்த ஆறானது தட்சிணமுக நந்தி தீர்த்தம் அல்லது மல்லேசுவர் காடு மல்லேஸ்வரா கோயில் அருகே தோன்றி, நயாந்தஹல்லி, இராஜேசுவரி நகர் மற்றும் கெங்கேரி வழியாகப் பாய்கிறது. இதனை மல்லேசுவரம் மந்திரி பேரங்காடி, மாகடி சாலை மற்றும் மைசூர் சாலை மெற்றோ நிலையங்கள் அருகில் காணலாம். இந்த நதி பிடாடி அருகில் உள்ள விருட்சபவதி நீர்த்தேக்கத்தினை ஏற்படுத்துகிறது.[4] இது கனகபுரா அருகே ஆர்க்காவதி ஆற்றின் துணை நதியாக இணைகிறது. இந்த நதி 383 சதுர கிமீ பரப்பளவு வடிநிலத்தினை கொண்டுள்ளது.[5] இந்த ஆற்றிலிருந்து ஒரு சிறிய ஓடை பசவனகுடியில் உள்ள புகல் பாறைக்கு அருகில் உருவாகி, மைசூர் சாலையின் அருகே பிரதான ஆற்றில் கலக்கிறது.[6] மத முக்கியத்துவம்இந்த ஆற்றின் ஓட்டத்தில் பல கோயில்கள் உள்ளன. விருஷபாவதியின் கரையில் உள்ள சில பிரபலமான கோயில்கள் தொட்ட விநாயகர் மற்றும் தொட்டா பசவ கோயில், கலியுக அனுமன் கோயில், கவி கங்காதரேசுவரர் கோயில் மற்றும் காடு மல்லேஸ்வரா கோயில் . விஜயநகரப் பேரரசின் ராஜகுருவாக இருந்த சன்னப்பட்டனாவைச் சேர்ந்த ஸ்ரீ வியாசராயரால் 1425 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலி அனுமன் கோயில் 600 ஆண்டுகளுக்கும் மேலானது. விருஷபவதி மற்றும் பசுசிமவாஹினி ஆகிய இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. கெங்கேரியில் உள்ள ஈஸ்வரர் கோவில் கி.பி.1050ம் ஆண்டிற்கு முந்தியது.[3] மாசுபாடுதொழில்துறை, விவசாயம் மற்றும் உள்நாட்டு மூலங்களிலிருந்து வரும் மாசுபடுத்திகளால் இந்த நதி மிகவும் மாசுபட்டுள்ளது.[1][7] "சுத்திகரிக்கப்படாத அல்லது மோசமாகச் சுத்திகரிக்கப்பட்ட வீட்டுக் கழிவுநீர் ஆற்றில் கலப்பதால்" ஆற்று நீர் கருமையாக, துர்நாற்றம் மற்றும் நுரையுடனும் இருப்பதாகக் கூறப்படுகிறது.[6] 2005ஆம் ஆண்டில், அப்போதைய கர்நாடக முதல்வர் தரம்சிங், ஆற்றினை அகலப்படுத்தி, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் உள்ளடக்கிய நதிப் பள்ளத்தாக்கை மறுவடிவமைக்கும் திட்டத்தினை முன்மொழிந்தார்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia