வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் (ஆங்கிலம்:Vennandur block), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இராசிபுரம் வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் ஆகும். இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெண்ணந்தூரில் உள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகள் உள்ளது.[3] நிலவியல்வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் 11,5206 ° வடக்கு, 78,0872 ° கிழக்கில் அமைந்துள்ளது. இது 218 மீட்டர் ( 726 அடி) உயரத்தில் உள்ளது. வெண்ணந்தூர்-ஏரி வெண்ணந்தூருக்கு அருகில் மேற்கே அமைந்துள்ளது. வெண்ணந்தூர் அருகில் அலவாய்மலை உள்ளது இது கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். திருமணிமுத்தாறு அருகில் உள்ள ஆறு. இது ஏற்காடு மலையில் இருந்து ஆரம்பமாகிறது. மாவட்ட தலைநகர் நாமக்கல் வெண்ணந்தூரில் இருந்து 39 கி.மீ.. தொலைவில் அமைந்துள்ளது.மாநில தலைநகர் சென்னை வெண்ணந்தூரில் இருந்து 370 கி.மீ.. தொலைவில் அமைந்துள்ளது. ஊராட்சி மன்றங்கள்வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களின் விவரம்:
மக்கள் வகைப்பாடுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,045 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 32,107 ஆண்கள், 29,938 பெண்கள் ஆவார்கள். வெளி இணைப்புகள்
இதனையும் காண்கஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia