10 ரூபாய் நாணயம் (இந்தியா)
![]() இந்திய பத்து ரூபாய் நாணயம் (Indian 10-rupee coin (₹10) என்பது இந்திய ரூபாய் நாணயங்களில் ஒன்றாகும். 2005 இல் இருந்து இந்திய நாணயங்களில் ₹10 உயர் மதிப்புமிக்க நாணயமாக உள்ளது. தற்போதைய ₹ 10 நாணயத்தின் வடிவமைப்பானது 2011 ஆண்டைய வடிவமைப்பாகும். இருப்பினும், 2011 ஆம் ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட ₹ 10 நாணயங்களும் நாட்டில் சட்டபூர்வமாக செல்லத்தக்கவையாக உள்ளன. வடிவமைப்பு2005 வடிவமைப்பு2005 ஆண்டு வெளியிடப்பட்ட முதல் ₹10 நாணயமானது 27 மிமீ விட்டமுடையது சிறப்பு எழுத்தில் "भारत" மற்றும் "INDIA" என உச்சியில் பொறிக்கப்பட்டிருந்தது, இதனுடன் சிங்கச் சின்னமும் 'சத்யமேவ ஜெயதே' என்ற வாசகமும் இடம்பெற்றது. கீழே நாணயத்தின் ஆண்டு இடம்பெற்றிருந்தது. நாணயத்தின் பின்புறம் கூட்டல் குறியைப்போன்ற நான்கு பக்கக்கோடுகள் ஒரு முனையில் இணைவது போன்ற குறியீடும், இந்த கூட்டல் குறியீட்டுக் கோடுகள் இணையை ஒட்டி நான்கு திசைகளிலும் நான்கு புள்ளிகள் இடப்பட்டுள்ளன. மேலும் வெளி வலையத்தில் "दस रुपये" மற்றும் "TEN RUPEES" என்ற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.[2] 2009 வடிவமைப்புஇரண்டாவது வடிவமைப்பில் முதல் பக்கத்தில் இரண்டு கிடைமட்ட கோடுகள் இடம்பெற்றன. மேலும் நாணயத்தின் வெளி வட்டத்தின் மேலே தலைப் பெழுத்தாக "भारत" மற்றும் "INDIA" ஆகிய எழுத்துக்களும், மையத்தில் சிங்க முத்திரையும், வெளி வட்டத்தின் கீழே அச்சிடப்பட்ட ஆண்டும் அச்சிடப்பட்டிருந்தன. நாணயத்தின் பின்பக்கத்தின் மேல் வட்டத்தில்15 வேல் முனைகள் போன்ற குறியீடுகள் அமைக்கப்பட்டும், மையத்தில் 10 என்ற எணும், கீழ் வட்டத்தில் ஆங்கிலம், இந்தியில் Rupees மற்றும் रुपये என்ற சொற்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளன. இந்த நாணயங்களில் ஏற்பட்ட வடிவமைப்பு மாற்றங்களினால் சமூக ஊடகங்களில் போலி நாணயங்கள் உள்ளதாக வதந்திகள் பரவின.[3] எனினும் 2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் உருவான இந்த வதந்திகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2011 வடிவமைப்பு₹10 நாணயத்தின் மூன்றாவது வடிவமைப்பு 2011 இல் உருவாக்கப்பட்டது, முதல் பக்கத்தின் வெளிப்புற வளையத்தின் இடதுபுறத்தில் "भारत" என்றும் வலதுபுறத்தில் "INDIA" என்ற எழுத்துகளும், வளையத்தின் கீழ் புறத்தில் நாணயம் அச்சிடப்பட்ட ஆண்டும் அச்சிட்ட ஆலையின் குறியீடும் இடப்பட்டன. நாணயத்தின் மையத்தில் சிங்க முத்திரையும் அதன் கீழே "सत्यमेव जयते" என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தன. பின்புறமாக மையத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு ₹ குறியீடும் அதன் கீழை 10 என்றும் குறிப்பிடப்பட்டும் இருந்தன. காசாலைக் குறியீடு
கள்ளக் காசு வதந்தி2016 சூலையில், சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியின் விளைவாக, இந்தியாவில் சில கடைக்காரர்கள் ₹10 ரூபாய் நாணயங்களை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia