3 பைசா (இந்திய நாணயம்)
மூன்று பைசா (Three paise (Hindi: तीन पैसे) என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 3⁄100 ஆகும். பைசாவின் சின்னம் p. வரலாறு1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி பைச நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது "ஒரு பைசா" என அழைக்கப்பட்டது. பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2][3] நாணய அடிப்புமூன்று பைசா நாணயங்கள் 1964 முதல் 1971 வரை அச்சிடப்பட்டன. இவை மும்பை மற்றும் கல்கத்தாவிலுள்ள இந்திய அரசு காசாலைகளில் அச்சிடப்பட்டன. மற்றும் மும்பை ஆலையின் சிறிய அடையாளமாக ♦ (சிறிய புள்ளி / வைரம்) இடப்பட்டது. கல்கத்தா ஆலையில் அச்சிடப்பட்ட நாணயங்கள் எந்த குறியீடுமின்றி வெளியிடப்பட்டன. மூன்று பைசா நாணயமானது பிற்காலத்தில் செல்லாததாக்கப்பட்டது.[4] மொத்த நாணயங்கள்மொத்தம் 1,612,704,568 நாணயங்கள் 1964 முதல் 1971 வரை அச்சிடப்பட்டன . நாணயம்மூன்று பைசா நாணயங்கள் அலுமினிய உலோகத்தில் தயாரிக்கப்பட்டன. காசின் எடை 1.25 கிராம்கள், விட்டம் 21 மில்லிமீட்டர்கள் (0.83 அங்) கனம் 2 மில்லிமீட்டர்கள் (0.079 அங்). மூன்று பைசா நாணயமானது அறுங்கோண வடிவில் தயாரிக்கப்பட்டது. வகைகள்
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia