500 ரூபாய் பணத்தாள் (இந்தியா)இந்திய 500 ரூபாய் பணத்தாள் (Indian 500-rupee banknote (₹500) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். தற்போது புழக்கத்தில் உள்ள ₹500 பணத்தாளானது 2016 நவம்பர் 10 இல் இருந்து புழக்கத்தில் இருந்து வருகிறது. இது மகாத்மா காந்தி புதிய வரிசையின் ஒரு பகுதி ஆகும். இதற்கு முந்தைய மகாத்மா காந்தி வரிசை பணத்தாளானது 1997 அக்டோபர் முதல் 2016 நவம்பர்வரை புழக்கத்தில் இருந்தது, அவை 2016 நவம்பர் 8 இல் செல்லாதவை ஆக்கப்பட்டன. 2017 சூன் 13 அன்று, ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 500 ரூபாய் பணத்தாள் வெளியிடப்படும் என அறிவித்தது. வரலாறு₹500 பணத்தாளானது இந்திய ரிசர்வ் வங்கியால் 1987 அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. பணவீக்கத்தின் காரணமாக அதிகரித்து வரும் பணப்புழக்கத்தினால் இது அறிமுகம் செய்யப்பட்டது.[1] இந்த பணத்தாளில் குறிப்பிடத்தக்க வகையில்இந்திய தேசிய இலச்சினையான, சாரனாத் சிங்க உருவத்துக்கு பதிலாக மகாத்மா காந்தியின் உருவப்படம் இடம்பெற்றது. இந்த வடிவமைப்பின் புகழானது மற்ற இந்திய ரூபாய் நோட்டுகளின் மறுவடிவத்திற்கு வழிவகுத்தது, அது முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2016 நவம்பர் 8 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும், கள்ள நோட்டு பிரச்சனையை தீர்ப்பதற்கும் மகாத்மா காந்தி வரிசை 500 ரூபாய் பணத்தாளை செல்லாததாக அறிவித்தார்.[2][3][4][5][6][7] 2016 நவம்பர் 10 அன்று, முந்தைய பணத்தாள்களுக்கு மாற்றாக புதிய 500 ரூபாய் நோட்டுகளாக மகாத்மா காந்தி புதிய வரிசை பணத்தாளாக மாற்றப்பட்டன.[8] மகாத்மா காந்தி புதிய வரிசைவடிவம்₹500 பணத்தாளின் மகாத்மா காந்தி புதிய வரிசை பணத் தாளானது 66மிமீ x 150மிமீ அளவில், சாம்பல் நிறத்தில், முன்பக்கம் மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக பிரெயில் அம்சம் உள்ளது. தாளின் பின்புறத்தில் இந்திய மரபுச் சின்னமான செங்கோட்டை, மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மகாத்மா காந்தி வரிசை₹500 பணத்தாளின் மகாத்மா காந்தி வரிசை தாளானது 167 × 73 மிமீ அளவில் அரஞ்சு-மஞ்சள் நிறத்தில், முன்பக்கம் மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக பிரெயில் அம்சம் உள்ளது. பின்பக்கம்உப்பு சத்யாகிரகத்தை சித்தரிக்கும் படம் இடம்பெற்றுள்ளது. 2011 இக்குப் பிறகு, வெளியிடப்பட்ட 500 ரூபாய் பணத்தாளில் புதிய இந்திய ரூபாய்க் குறியீடான ₹ சின்னம்]] இடம்பெற்றது.[9] 2005 க்கு முன் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் 2014 மார்ச் 31 முதல் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2014 சனவரியில் வெளியிட்டது. பின்னர் காலக்கெடுவை 2015 சனவரி 1 வரை நீட்டித்தது. இந்த காலக்கெடு மேலும் 2016 சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.[10] மொழிகள்மற்ற இந்திய ரூபாய் நோட்டுகள் போல ₹500 பணத்தாள்களிலும் 17 இந்திய மொழிகளில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம், இந்தியில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றிருந்ததன. மொழிகளின் வரிசை பின்வருமாறு: அசாமி, வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, உருது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia