ஐந்து பைசா (five paise (Hindi: पाँच पैसे) என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில்1⁄20 ஆகும். பைசாவின் சின்னம் p.
வரலாறு
1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி பைச நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது "ஒரு பைசா" என அழைக்கப்பட்டது. பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது.[4][5][6] ஐந்து பைசா நாணயங்கள் 1964 முதல் 1984 வரை அச்சிடப்பட்டன.
அச்சிடல்
ஐந்து பைசா நாணயங்கள் 1964 முதல் 1984 வரை அச்சிடப்பட்டன. இவை மும்பை மற்றும் கல்கத்தா, ஐதராபாதிதிலுள்ள இந்திய அரசு காசாலைகளில் அச்சிடப்பட்டன இந்த நாணயமானது 1994 இல் செல்லாததாக்கப்பட்டது.
ஆலைக் குறியீடு
ஐந்து பைசா நாணயங்களில் அவை அச்சிடப்பட்ட ஆலைகளைப் பொறுத்து இடப்பட்ட குறியீடுகள் பின்வறுமாறு:
ஆலை
குறி
விளக்கம்
குறிப்பு
ஐதராபாத்
☆
ஐந்து முனை நட்சத்திரம்
கொல்கத்தா
குறியீடு இல்லை
இந்தியாவின் முதல் காசு அச்சிடும் ஆலையாக இது இருந்ததால், இந்த ஆலையில் அச்சிடும் காசுகளில் குறியீடு இடும் வழக்கம் இல்லை.[7]
மொத்தம் 4,924,011,110 நாணயங்கள் 1964 முதல் 1994 வரை அச்சிடப்பட்டன.
நாணயம்
ஐந்து பைசா நாணயங்கள் அலுமினியம் மற்றும் அலுமினியம்-மக்னீசியம் உலோகக் கலவையில் அச்சிடப்பட்டன. இந்த நாணயங்களானது சாய்சதுர வடிவில் முழுங்கிய முனைகளுடன் செய்யப்ட்டன.