ஒரு ரூபாய் (இந்திய நாணயம்)
ஒரு ரூபாய் நாணயம் (One rupee coin) என்பது ஒரு இந்திய நாணயமாகும். இதன் மதிப்பு ஒரு இந்திய ரூபாய் ஆகும். இது நூறு பைசாக்கள் ஆகும். தற்போது, ஒரு ரூபாய் நாணயமானது புழக்கத்தில் உள்ள இரண்டாவது சிறிய நாணயமாகும். 1992 முதல், இந்திய ஒரு ரூபாய் நாணயங்கள் துருவேறா எஃகில் வட்ட வடிவில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் நாணயத்தின் எடையானது 3.76 கிராம்கள் (58.0 grains), விட்டம் 21.93-மில்லிமீட்டர் (0.863 அங்), கனம் 1.45-மில்லிமீட்டர் (0.057 அங்) ஆகும். சுதந்திர இந்தியாவில், ஒரு ரூபாய் நாணயங்களானது 1950 ஆம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டு தற்போதுவரை புழக்கத்தில் உள்ளன. வரலாறுசூரி பேரரசுசூர் பேரரசின் நிறுவனரான ஷேர் ஷா சூரி வட இந்தியாவை கி.பி 1540 முதல் 1545 வரை ஆட்சி செய்தார். [1] அவர் தனது ஆட்சிக் காலத்தில், 1542 ஆம் ஆண்டில் தூய வெள்ளி நாணயங்களை ரூபியா ("அழகான வடிவம்" என்று பொருள்படும்) என்ற பெயரில் வெளியிட்டார். இந்தப் பெயரானது தொடர்ந்து வந்த முகலாயப் பேரரசு, மராட்டியப் பேரரசு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், பிரித்தானிய ஆட்சிக் காலங்களிலும் பயன்படுத்தப்பட்டது.[2][3] ரூபியா ஆனது 1835 ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியால் தக்கவைக்கப்பட்டதுடன் 1947 வரை பிரித்தானிய அரசாலும் அடிப்படையான நாணயமாகக் பயன்படுத்தப்பட்டது.[4] ஒவ்வொரு ரூபியா நாணயமும் 178 grains (11.5 கிராம்கள்) எடையுடன் இருந்தன. ரூபியாவுக்கான சில்லறை அலகுகள் செப்புக் காசுகளாக இருந்தன. 40 செப்புக் காசுகள் ஒரு ரூபியாவாக இருந்தன. ஷேர் ஷா சூரி இந்த செப்புக் காசுகளுக்கு பைசா எனப் பெயரிட்டார்.[5]
சென்னை மாகாணம்சென்னை மாகாணமானது கி.பி 1815 வரை ஒரு ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. ஒரு ரூபாயானது பன்னிரண்டு மதராசு பணத்துக்கு சமமாக இருந்தது.
கிழக்கிந்தய நிறுவனம்17 ஆம் நூற்றாண்டில், கிழக்கு இந்திய நிறுவனமானது இந்தியாவில் பிரித்தானிய பவுண்டை அறிமுகப்படுத்த விரும்பியது. ஆனால் ரூபியாவின் புகழ் காரணமாக, இந்தியாவில் பவுண்டு அறிமுகப்படுத்தப்படவில்லை. கிபி 1717 இல் தான் முகலாய பணத்தை நாணயமாக்குவதற்கு ஆங்கிலேயர் முயன்று முகலாயப் பேரரசர் பருக்சியாரிடமிருந்து அனுமதி பெற்றனர். 1835 ஆம் ஆண்டு சீரான நாணயத்துக்காக, 1835 ஆம் ஆண்டு நாணயச் சட்டம் அமலுக்கு வந்தது.[6] புதிய ஒரு ரூபாய் நாணயம் 0.917 வெள்ளியும், 11.66 கிராம்கள் (179.9 grains) எடையும், 30.55 மில்லிமீட்டர்கள் (1.203 அங்) விட்டமும் கொண்டிருந்தது. 1835 க்குப் பிறகும் 1862 க்கு முன்பும் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தின் பின்புறம் நாட்டின் பெயருக்குப் பதில் "கிழக்கு இந்தியா கம்பெனி" என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.[7] 1835 ஆம் ஆண்டு அச்சிட்ட ஒரு ரூபாய் நாணயங்களில் முதன் முதலில் அரசர் வில்லியம் IIII எனக் குறிக்கப்பட்டது.[8] 1840 க்குப் பிறகு வெளியான நாணயங்களில் அரசி விக்டோரியா (கி.பி 1840 முதல் 1901 ), எட்வர்ட் VII (கி.பி 1903 முதல் 1910 வரை ), ஜார்ஜ் V (1911 முதல் 1936 வரை), ஜார்ஜ் VI (1938 முதல் 1947 வரை) உருவங்கள் இடப்பட்டிருந்தன.[9] பிரித்தானிய அரசுஇந்தியாவானது கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் ஒரு நூற்றாண்டு இருந்த பின்னர், 1858 இல் இருந்து பிரித்தானியாவின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. இது 1947 இல் இந்தியா விடுதைலை அடையும்வரை நீடித்தது. [10] 1835 முதல் 1858 வரை, 1835 ஆம் ஆண்டு நாணயச் சட்டத்தின்படி சீரான ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன. 1862 ஆம் ஆண்டில், புதிய ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன, இவை ரெகலால் வெளியீடு என அழைக்கப்பட்டன, இதில் ராணி விக்டோரியாவின் முகமும் அடுத்தபக்கம் நாட்டின் பெயராக "இந்தியா" என்றும் அச்சிடப்பட்டிருந்தது. 1835 ஆம் ஆண்டிற்குப் பிகும் 1862 ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வெளியான ஒரு ரூபாய் நாணயங்களின் பின்புறம் நாட்டின் பெயருக்குப் பதில் "கிழக்கு இந்தியா கம்பெனி" என்ற பெயர் இருந்தது குறிப்பிடத் தக்கது. 1862 முதல் 1939 வரை, ஒரு ரூபாய் நாணயங்கள் 0.917 வெள்ளியிலும், எடை 11.66 கிராம்கள் (179.9 grains), விட்டம் 30.78 மில்லிமீட்டர்கள் (1.212 அங்), கனம் 1.9 மில்லிமீட்டர்கள் (0.075 அங்) என்றவாறு வெளியிடப்பட்டன. நாணயத்தின் மேற்புறம் அரசி விக்டோரியா (1862 முதல் 1901 வரை), எட்வர்ட் VII (1903 முதல் 1910 வரை), ஜால்ஜ் V (1911 முதல் 1936 வரை), ஜார்ஜ் VI (1938 முதல் 1947வரை) ஆகியோரின் உருவங்கள் முத்திரையாக இடப்பட்டிருந்தன. எட்வர்ட் VIII குறைந்த காலமே ஆட்சியில் இருந்ததால் (1936 சனவரி-திசம்பர்) இவர் உருவம் பதித்த நாணயங்கள் வெளியாகவில்லை. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் காரணமாக, வெள்ளிக்கு பற்றாக்குறை இருந்தது. இதன் விளைவாக, 0.917 வெள்ளி ரூபாய் நாணயங்கள் 1940 ஆம் ஆண்டில் கால்பங்கு வெள்ளிக் கலவை (0.500) நாணயங்களாக மாற்றப்பட்டன. 1947 ஆம் ஆண்டில் வெள்ளி ஒரு ரூபாய் நாணயங்கள், நிக்கல் நாணயங்களாக மாற்றப்பட்டன.[2] ஒரு ரூபாய் நாணம் 1835 முதல் 1947 வரை
சுதந்திர இந்தியா1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா சுதந்திரம் பெற்றது. பிரித்தானிய அரசின் நாணய அமைப்பு மற்றும் நாணயங்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டன. 1950 ஆகத்து 15, இல் இந்தியா புதிய நாணயங்களை அறிமுகப்படுத்தியது. புதிய நாணயங்கள் அறிமுகப்படுத்துதலானது (ஒரு ரூபாய் நாணயம் உட்பட) பின்வரும் காலவரிசை மற்றும் காரணங்களில் செய்யப்பட்டன;[10][16]
துணையலகுகள்1947 ஆம் ஆண்டு முதல் 1957 காலகட்டத்தில், இந்திய ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆணாவும் நான்கு இந்திய பைசாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது (1835 முதல் 1947 வரை, ஒவ்வொரு பைசாவும் மூன்று இந்திய தம்பிடிகளாக பிரிக்கப்பட்டது, 1947 இல் தம்பிடி செல்லாததாக்கப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது). கீழே உள்ள அட்டவணையில் ஒரு ரூபாயும் (1835-தற்போது வரை) அதன் துணை-அலகுகளையும் காட்டுகிறது.[3]
நாணயம் ஆலைகள்மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய காசு ஆலைகள் மூலமாக 2017 ஆம் ஆண்டுவரையான காலகட்டங்களில் ஒரு ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து நாணயங்களும் இந்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன.[17] காசாலை அடையாளங்கள்1947 முதல் புதிய ஒரு ரூபாய் நாணயங்களில் பின்வரும் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.[18][19][20]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia