50 பைசா இந்திய நாணயம்
![]() 50 பைசா இந்திய நாணயம், அல்லது 50 காசு (பேச்சுவழக்கில் எட்டணா என்றும் அழைக்கப்பட்டது)(50 paise Indian coin) என்பது 1/2 (அரை) ரூபாய் மதிப்பு நாணயத்தின் ஓர் அலகு ஆகும். இந்திய ஐம்பது பைசா (Hindi: पचास पैसे) (singular: Paisa). பைசாவின் சின்னம் ( வரலாறு1957ஆம் ஆண்டிற்கு முன்னா், இந்திய ரூபாய் தசமப்படுத்தப்படாமல், 1835ஆம் ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டு வரை ஒரு ரூபாயானது 16 அணாக்களாக வகுக்கப்பட்டது. ஒவ்வொரு அணாவும் நான்கு பைசாக்களாக வகுக்கப்பட்டது. ஒவ்வொரு பைசாவும் மூன்று பைகளாக 1947ஆம் ஆண்டுவரை பிரிக்கப்பட்டிருந்தது. 1955ஆம் ஆண்டில், இந்தியா "நாணயத்திற்கான மெட்ரிக் முறைமையை" பின்பற்ற "இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. பைசா நாணயங்கள் 1957இல் அறிமுகப்படுத்தியது, ஆனால் 1957 முதல் 1964 வரை பைசா நாணயமானது "நயா பைசா" (பொருள்; புதிய பைசா) என்று அழைக்கப்பட்டது. சூன் 1, 1964 அன்று "நயா" என்ற சொல் கைவிடப்பட்டது. மேலும் இந்தச் சொல்லுக்கு பதில் "ஒரு பைசா என்றச் சொல் பயன்படுத்தப்பட்டது. பைசா நாணயங்கள் "தசம தொடா்பின்" ஒரு பகுதியாக வெளியிடப்பட்டன.[1][2] மேலும் பார்க்கசான்றுகள் |
Portal di Ensiklopedia Dunia