1920 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்1920 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1920 Summer Olympics, French: Les Jeux olympiques d'été de 1920), அலுவல்முறையாக ஏழாம் ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள், 1920ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1] மார்ச் 1912இல் நடந்த பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 13வது அமர்வில் இதற்கான ஆட்டக்கேள்வியை பெல்ஜியம் முன்வைத்தது. அப்போது நடத்தும் நாடு எதுவென முடிவாகவில்லை. செருமானியத் தலைநகர் பெர்லினில் நடைபெறுவதாகவிருந்த 1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டது. போருக்குப் பின்னர் 1919இல் ஏற்பட்ட பாரிசு அமைதி ஒப்பந்தம் ஒலிம்பிக் விளையாட்டுக்களை வெகுவாக பாதித்தது; புதிய நாடுகள் உருவாகின, தோற்ற நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அங்கேரிய முடியாட்சி, செருமனியின் வீமர் குடியரசு, ஆத்திரியா, பல்கேரியா, உதுமானியப் பேரரசு ஆகிய நாடுகள் இந்தப் போரைத் துவக்கியதாக இந்த விளையாட்டுக்களில் பங்கேற்க தடை செய்யப்பட்டனர். செருமனி 1925 வரை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த ஒலிம்பிக் நடத்தும் நாட்டிற்கும் பங்கேற்பாளர்களுக்கும் மிகுந்த நிதி நெருக்கடியை உருவாக்கியது. விளையாட்டுகளில் பெருவாரியாக போட்டியாளர்கள் பங்கேற்கவில்லை.[2] பங்கேற்ற நாடுகள்![]() ![]() ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக்கில் மொத்தம் 29 நாடுகள் பங்கேற்றன. இது 1912ஆம் ஆண்டு பங்கேற்ற நாடுகளை விட ஒன்று கூடுதலாகும். முதலாம் உலகப் போரில் தோல்வியுற்ற செருமனி, ஆஸ்திரியா, அங்கேரி, பல்காரியா, துருக்கி ஆகிய நாடுகள் அழைக்கப்படவில்லை. புதியதாக உருவான ஐரோப்பிய நாடுகளில் எசுத்தோனியா மட்டுமே பங்கேற்றது; பொகீமியாவிலிருந்து உருவான செக்கோசிலோவாக்கியாவும் பங்கேற்றது; இது உலகப் போருக்கு முன்னர் ஆத்திரியாவின் அங்கமாக இருந்தது. போலந்து சோவியத் ஒன்றியத்துடனான போரில் மும்மரமாக இருந்ததால் பங்கேற்கவில்லை. அரசியல் தடைகள் காரணமாக சோவியத் உருசியாவும் அழைக்கப்படவில்லை. அர்கெந்தீனா, செர்புகள்,குரோசியர் இசுலோவன்களின் முடியாட்சி, பிரேசில், மொனாக்கோ முதல்முறையாக பங்கேற்றன. 1908இலும் 1912இலும் ஆத்திரேலியாவுடன் இணைந்த அணியாக இருந்த நியூசிலாந்து இந்த போட்டிகளில் முதன்முறையாக தனது அடையாளத்துடன் போட்டியிட்டது.
பதக்க எண்ணிக்கை![]() 1920 ஒலிம்பிக்கில் மிகுந்த பதக்கங்கள் பெற்ற முதல் பத்து நாடுகள்:
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia