1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1928இல் ஒலிம்பிக் விளையாட்டரங்கம்
நெதர்லாந்திற்கும் உருகுவைக்கும் இடையேயான காற்பந்தாட்டத்தை இளவரசர் என்றிக்கு பார்வையிடுதல்

1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1928 Summer Olympics, டச்சு: Olympische Zomerspelen 1928), அலுவல்முறையாக ஒன்பதாவது ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். 1920 மற்றும் 1924 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஆட்டக் கேள்வி விடுத்திருந்தது; ஆனால் முறையே பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பிற்கும் and பியர் தெ குபர்த்தெனின் பாரிசிற்கும் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. 1928க்கு ஆட்டக்கேள்வி விடுத்த மற்றொரு நகரமான லாஸ் ஏஞ்சலஸ் நான்காண்டுகள் கழித்து 1928 ஒலிம்பிக்கை நடத்தியது.

1932ஆம் ஆண்டு போட்டிகளை நடத்த முன்னேற்பாடாக இந்த விளையாட்டுக்களுக்கான வரவு செலவு கணக்கை ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் குழு கண்காணித்தது; மொத்த செலவு அமெரிக்க $1.183 மில்லியன் என்றும் வரவு அமெரிக்க$1.165 மில்லியன் என்றும் நட்டம் அமெரிக்க$ 18,000 என்றும் மதிப்பிட்டது. இந்த நட்டம் முந்தைய ஒலிம்பிக்கை விட குறைவானதாகவும் மதிப்பிட்டது.[1]

பங்கேற்ற நாடுகள்

ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்கில் 46 நாடுகள் பங்கேற்றன. மால்ட்டா, பனாமா, மற்றும் தெற்கு ரொடீசியா (தற்போது சிம்பாப்வே) முதல்முறையாகப் பங்கேற்றன.

பதக்க எண்ணிக்கை

1928 ஒலிம்பிக்கில் மிகுந்த பதக்கங்கள் பெற்ற முதல் பத்து நாடுகள்:

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 22 18 16 56
2  செருமனி 10 7 14 31
3  பின்லாந்து 8 8 9 25
4  சுவீடன் 7 6 12 25
5  இத்தாலி 7 5 7 19
6  சுவிட்சர்லாந்து 7 4 4 15
7  பிரான்சு 6 10 5 21
8  நெதர்லாந்து (நடத்தும் நாடு) 6 9 4 19
9  அங்கேரி 4 5 0 9
10  கனடா 4 4 7 15

மேற்சான்றுகள்

  1. Zarnowski, C. Frank (Summer 1992). "A Look at Olympic Costs". Citius, Altius, Fortius 1 (1): 16–32. http://www.la84foundation.org/SportsLibrary/JOH/JOHv1n1/JOHv1n1f.pdf. பார்த்த நாள்: 2007-03-24. 

வெளி இணைப்புகள்


முன்னர் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
ஆம்ஸ்டர்டம்

ஒன்பதாம் ஒலிம்பியாடு (1928)
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya