2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2023-2025 ICC World Test Championship) என்பது தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இது ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் 3-ஆவது பதிப்பாகும். இது ஆசசு தொடருடன் சூன் 2023 இல் தொடங்கியது.[1] 2025 சூனில் இலார்ட்சில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடிவடையும்.[2]
போட்டி முறை
மொத்தம் 69 போட்டிகள் கொண்ட 27 தொடர்களில், அனைத்து அணிகளும் 6 தேர்வு துடுப்பாட்ட தொடர்களை விளையாடும். 3 தொடர்களைத் தம் நாட்டிலும், பிற 3 தொடர்களை வெளிநாடுகளிலும் விளையாடுகின்றது. புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இலண்டன், இலார்ட்சில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.[3]
பங்கேற்கும் அணிகள்
ஐசிசி-யில் உள்ள முழு-உறுப்புரிமை கொண்ட ஒன்பது அணிகள் இதில் பங்கு கொள்ளும்:[4]
சிறந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.
வெற்றி பெற்ற அணி 12 புள்ளிகள் பெறும், வெற்றி-தோல்வியில்லாத போட்டிகளில் ஒவ்வொன்றும் 4 புள்ளிகள் பெரும்.
புள்ளிக் கழிவுகள்:
↑இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக ஆத்திரேலியாவின் 10 புள்ளிகள் குறைக்கப்பட்டன.[5]
↑தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக இந்தியாவின் 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.[6]
↑இங்கிலந்துக்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக நியூசிலாந்தின் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டன.[7]
↑மெதுவான ஆட்டத்திற்காக இங்கிலாந்தின் மொத்தம் 22 புள்ளிகள் ஆத்திரேலியாவுக்கு எதிரான முதல், இரண்டாவது, நான்காவது, ஐந்தாவது தேர்வுப் போட்டிகளிலும்,[5] நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியிலும் குறைக்கப்பட்டன.[7]
↑பாக்கித்தானுக்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக வங்காளதேசத்தின் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டன.[8]
↑மெதுவான ஆட்டத்திற்காக பாக்கித்தானின் மொத்தம் 8 புள்ளிகள் ஆத்திரேலியாவுக்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியிலும்,[9] வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது தேர்வுப் போட்டியிலும் குறைக்கப்பட்டன.[8]