அபுதாபி வணிக வங்கி
அபுதாபி வணிக வங்கி பரவலாக ஏடிசிபி, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த வணிக வங்கியாகும். இது 1985ஆம் ஆண்டில் வரையறு பொறுப்புடன் பொதுப் பங்கு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காலீஜ் வணிக வங்கியுடன், எமிரேட்சு வணிக வங்கியையும், பெடரல் வணிக வங்கியையும் இணைத்து இவ்வங்கி உருவாக்கப்பட்டது. அபுதாபி அரசானது அபுதாபி முதலீட்டு ஆணையம் வாயிலாக இவ்வங்கியின் 65 விழுக்காடு அளவிலான பங்குகளை வைத்துள்ளது. இதர விழுக்காடு பங்குகளை பிற தொழில் நிறுவனங்களும் பொது மக்களும் வைத்துள்ளனர். மூலதனத்தின் அடிப்படையில் இவ்வங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கும் பெரிய வங்கிகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இவ்வங்கியானது 2013ஆம் ஆண்டில் 3,620 மில்லியன் திர்கம்களை வருமானமாக ஈட்டியுள்ளது. 2012ஆம் ஆண்டில் இதன் இலாபமானது 2,810 திர்கம்கள் ஆகும்.[1] சேவைகள்ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த பொதுப் பங்கு நிறுவன வங்கியான இது தனிநபர் வங்கி, வணிக வங்கி, முதலீட்டு வங்கி, தொழில்முனைவோர் வங்கி, முகவர், பண மேலாண்மை போன்ற சேவைகளை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. மொத்த கிளைகள்இவ்வங்கிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் 48 கிளைகளும், இந்தியாவில் மும்பையில் ஒரு கிளையும், பெங்களூருவில் ஒரு கிளையும், ஐக்கிய இராச்சியத்தில் ஒரு கிளையும் செயல்படுகின்றன. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia