ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்ற இடங்கள்1896ஆம் ஆண்டு தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கப்பட்டது முதல் 22 வெவ்வேறு நகரங்களில் 27 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் 19 வெவ்வேறு நகரங்களில் 22 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் நடத்தப்பட்டுள்ளன. தவிரவும், மூன்று கோடைக்கால மற்றும் இரண்டு குளிர்கால விளையாட்டுக்கள் நடைபெறுவதாயிருந்து உலகப் போரினால் இரத்து செய்யப்பட்டன: 1916இல் பெர்லின் (கோடை), 1940இல் தோக்கியோ (கோடை) மற்றும் சப்போரோ (குளிர்), 1944இல் இலண்டன் (கோடை) மற்றும் இத்தாலி (குளிர்). ஏதென்சில் நடந்த 1906 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் தற்போது அங்கீகரிக்கப்படவில்லை.[1] எதிர்வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ப.ஒ.கு மூன்று நகரங்களை தேர்ந்தெடுத்துள்ளது: 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இரியோ டி செனீரோவிலும் 2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பையோங்சாங், தென் கொரியாவிலும் 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தோக்கியோவிலும் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக் நடத்திய நகரங்கள்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia