கன்னத்தில் முத்தமிட்டால்
கன்னத்தில் முத்தமிட்டால் (Kannathil Muthamittal) 2002இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம், இலங்கை இனப் பிரச்சனையை கதைக்கருவாகக் கொண்டிருந்தது[1]. இது இந்திய இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த தமிழ் படம். வகைகதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. எம்.டி.சியாமா (நந்திதா தாஸ்) இலங்கையில் தனது கணவனுடன் வசித்து வருகிறார். அப்போது போர் நடக்கும் எச்சரிக்கை வருகிறது. அப்போது அவர்கள் படகில் ஏற்றிவிடப்பட்டு ராமேஷ்வரம் செல்கிறார்கள். தனது கணவன் இலங்கை இராணுவத்திடம் மாட்டிக் கொண்டதால் தன்னுடன் தன் கணவனை அழைத்து செல்ல முடியாத அவள் தனியாக செல்கிறாள். ராமேஷ்வரத்தில் அகதிகள் முகாமில் அவளுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த பெண் குழந்தையை திருச்செல்வமும் (மாதவன்) இந்திராவும் (சிம்ரன்) தத்தெடுத்துக் கொள்கின்றனர். இக்குழந்தை உரிய வயதை எய்தியதும் பெற்றோர்கள் இவளிடம் தத்தெடுக்கப்பட்ட விபரத்தைக் கூற, இவள் பல விதமான உணர்ச்சித் தத்தளிப்புகளுக்கு ஆளாகிறாள். தன் பிறப்புத் தாயைக் காண இவள் பேரவா கொள்வதால், இவள் பெற்றோர் இவளை இலங்கைக்கு அழைத்துச் செல்கின்றனர். பெருமுயற்சிக்குப் பின் அவள் தாய் விடுதலைப்புலி போராளி என அறிந்து அவளைச் சந்திக்கின்றனர். தன் தாயை இவள் அமைதி நிலவும் தமிழகத்துக்கு அழைக்கின்றாள். தாய் மறுத்து விடுகின்றாள். பாடல்கள்விடை கொடு எங்கள் நாடே
இப்பாடலின் வரிகளை வைரமுத்து எழுத, ஏ. ஆர். ரகுமான் இசையில், ஏ. ஆர். ரகுமான், எம். எஸ். விஸ்வநாதன் உள்ளிட்டோர் பாடினார்கள். விருதுகள்
2003 லாஸ் ஏஞ்சல்ஸ் இந்தியத் திரைப்பட விழா (அமெரிக்கா)
2003 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
2004 ரிவர்ரன் சர்வதேச திரைப்பட விழா (அமெரிக்கா)
2004 நியூ ஹவன் திரைப்பட விழா (அமெரிக்கா)
வெஸ்ட்செஸ்டர் திரைப்பட விழா (அமெரிக்கா)
2003 சிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழா (சிம்பாப்வே)
2002 ஆண்டிற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள்
மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia