கௌதமர்

கௌதம மகரிஷி
கௌதமரைச் சித்தரிக்கும் 19-ம் நூற்றாண்டு ஓவியம்
தலைப்புகள்/விருதுகள்சப்தரிஷிகளில் ஒருவர்
தத்துவம்நியாய சூத்திரங்கள்
பிரம்மகிரி மலை

கௌதம முனிவர் (ஆங்கிலம்: Gautama Maharishi; சமஸ்கிருதம்: महर्षिः गौतम) அல்லது அட்சபாதர்‌ என்பவர் சப்தரிஷிகளுள் ஒருவர். வேத கால மகரிசிகளுள் இவரும் ஒருவர். பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பெயரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. தேவி பாகவதத்தில் கோதாவரி நதிக்கு அப்பெயர் இவராலேயே வந்தது என்று கூறப்பட்டுள்ளது. இவரது மனையாளின் பெயர் அகலிகை. இவர்களுக்கு வாமதேவ முனிவர், நோதாஸ், சதானந்தர் என்ற புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேதத்தில் பல சுலோகங்களை இயற்றியுள்ளனர். ரிக் வேதத்தில் இவர்களது குடும்பத்தை விவரிக்கிறது. பாரத்வாஜ மகரிஷியும், கௌதமருடன் அங்கரிசர் குலத்தில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.[1]

ரிக்வேதத்தில் 20 சூக்தங்களைச் செய்துள்ளார்.

கௌதமர் சன்னதி, மாதா அகல்யா கோயில், புஷ்கர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. INTRODUCTION TO GAUTAMA
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya