தனிம அட்டவணை எதிர்மின்னி வலயம்

ஓர் அணுவில் உள்ள எதிர்மின்னிகள், அவை பெற்றுள்ள ஆற்றலின் அடிப்படையில் பல்வேறு சுற்றுப்பாதைகளில் உலா வருகின்றன. இவ் வெவ்வேறு சுற்றுப்பாதைகளுக்கு, எதிர்மின்னி வலயம் அல்லது கூடு (ஆர்பிட்டால்) என்று பெயர். ஓர் அணுவில், யாவற்றினும் மிக அதிக ஆற்றல் உள்ள எதிர்மின்னிகள் உலாவரும் வலயத்தின் அடிப்படையிலே, தனிம அட்டவணையில் அடுத்தடுத்து உள்ள நெடுங்குழுத் தனிமங்கள் குழுக்களாக வகைப்படுத்தப்படும். முதல் வலயமாகிய s என்னும் எதிர்மின்னிக் கூட்டில் ஒரு தனிமத்தின் அதிக ஆற்றல் உள்ள எதிர்மின்னிகள் இருந்தால், அவ்வகைத் தனிமங்களுக்கு s-வலயக்குழுவைச் சேர்ந்த தனிமங்கள் என்று பெயர். அதே போல ஒரு தனிமத்தின் உயர்-ஆற்றல் எதிர்மின்னிகள் p என்னும் சுற்றுப்பாதைக் கூட்டில் இருந்தால் அத் தனிமம் p-வலயக்குழுவில் உள்ளதாகக் கொள்ளப்படும். எதிர்மின்னிகள் ஒரு வலயத்தில் இருந்து மற்றொரு வலயத்திற்கு மாறும் பொழுது அவைகளுக்கு இடையே உள்ள ஆற்றலை வெளிவிடுகின்றது. அவ்வாற்றல் ஒளியாக வெளிவிடும் பொழுது, அதனை அளக்கப் பயன்படுத்திய ஒளிநிற அளவீட்டில் அவை வெவ்வேறு நிறக்கோடுகளாகத் தெரிந்தன. அக்கோடுகளின் தோற்றத்தின் அடிப்படையிலே அவற்றை தெளிவானது (sharp), தலைமையானது (prinicpal), பிசிறுடையது (diffuse), அடிப்படையானது (fundamental), என்றும் மற்ற கோடுகளை குறிப்பிட தொடர்ந்து வரும் ரோமானிய எழுத்துக்களாலும் குறித்தனர். எனவே எதிர்மின்னி வலயக் குழுக்கள் கீழ்வருவனவாகும்:

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya