திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்
திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் (Amritaghateswarar-Abirami Temple) என்பது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலம் ஆகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை அமைவிடம்இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை–தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி–நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது. இறைவன், இறைவி
வழிபட்டோர்அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன. தல வரலாறு மற்றும் இறைவனின் சாதனைகள்![]()
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
படத்தொகுப்பு
|
Portal di Ensiklopedia Dunia