நாத் வங்கி
நாத் வங்கி 1926ஆம் ஆண்டில் சேத்ர நாத் தலால் என்பவரால், அன்றைய பிரித்தானிய இந்தியாவின் நவ்காலியில், (தற்போதைய வங்காளதேசம்) தொடங்கப்பட்ட வங்கியாகும். இவ்வங்கியின் தலைமையகமும் மூன்று கிளைகளும் நவ்காலி மாவட்டத்திலும், ஒரு கிளை திப்பெரா மாவட்டத்தின் கோமிலாவிலும் இயங்கின. 1947இல் இந்தியப் பிரிவினையின் போது இம்மாவட்டங்கள் பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக பிரிக்கப்பட்டது. இதனால் இவ்வங்கி தனது தலைமையகத்தை கல்கத்தாவிற்கு மாற்றியது. கலைப்புஇந்தியப் பிரிவினை காலகட்டத்தில் ஏற்பட்ட நிதிநிலைமையை சமாளிக்க முடியாமல் இந்திய வங்கிகள் தடுமாற்றம் கண்டன. 1949இல் நாத் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய சில உத்தரவுகளை செயற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.[1] இதனை சரிசெய்வதில் தோல்வியடைந்த இவ்வங்கி 1950 இல் கலைக்கப்பட்டது.[1] இதனால் இவ்வங்கியின் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் உண்டானது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia