நெடுங்குழு 14 தனிமங்கள்
பண்புகள்வேதிப்பண்புகள்
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தனிமமும் அதன் வெளிப்புறக் கோளப்பாதையில் அதாவது அணுவின் உயர் ஆற்றல் மட்டத்தில் 4 எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கின்றன. இக்குழுவில் உள்ள அனைத்து தனிமங்களும் பொதுவான எலக்ட்ரான் அமைப்பாக ns2 np2 சுற்றுப்பாதை அமைப்பைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இத்தொகுதியில் சில உலோகப்போலிகளுடன் சேர்ந்து உலோகங்களும் அலோகங்களும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் இத்தொகுதிச் சேர்மங்கள் சகப்பிணைப்பு சேர்மங்களை உருவாக்குகின்றன. அதிக அளவு அயனியாக்கும் ஆற்றலை இத்தொகுதி சேர்மங்கள் பெறுகின்றன. மேலிருந்து கீழாகச் செல்லும்போது இந்த ஆற்றல் குறைகிறது. அணுவின் அளவு அதிகரிக்கும் போது எலெக்ட்ரான்களை இழப்பதற்கான போக்கும் அதிகரிக்கிறது, ஏனெனில் இவற்றினுடைய அணு எண்ணும் அதிகரிக்கிறது. கார்பன் மட்டுமே கார்பைடு (C4-) அயனிகளின் வடிவில் எதிர்மறை அயனிகளாக உருவாகிறது. சிலிக்கான் மற்றும் செருமானியம் என்ற இரண்டு உலோகப்போலிகளும் ஒவ்வொன்றும் +4 அயனிகளாக உருவாகின்றன. வெள்ளீயமும் ஈயமும் உலோகங்களாகும். பிளெரோவியம் செயற்கைத் தனிமமாகும். கதிரியக்கத் தன்மையும் குறைந்த அரை வாழ்வுக் காலமும் கொண்டதாக இது உள்ளது. சில மந்த வாயுப் பண்புகளை இது பெற்றுள்ளது. வெள்ளீயமும் ஈயமும் +2 அயனிகளாக மாறும் தன்மையையும் கொண்டுள்ளன. கார்பன் ஆலைடுகள் அனைத்துடனும் வினைபுரிந்து டெட்ரா ஆலைடுகளை உருவாக்குகிறது. கார்பனோராக்சைடு, கார்பனீராக்சைடு, கார்பன் கீழாக்சைடு என்ற மூன்று ஆக்சைடுகளை கார்பன் உருவாக்குகிறது. மேலும் கார்பன் டை சல்பைடுகள், டைசெலீனைடுகள் போன்ற சேர்மங்களையும் உருவாக்குகிறது [1]. SiH4 மற்றும் Si2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை சிலிக்கன் உண்டாக்குகிறது. புளோரின், குளோரின், அயோடின் போன்ற ஆலைடுகளுடன் சேர்ந்து சிலிக்கன் டெட்ரா ஆலைடுகளைத் தருகிறது. மேலும் சிலிக்கன் டையாக்சைடு, சிலிக்கன் டை சல்பைடு[2] போன்ற சேர்மங்களை உருவாக்குகிறது. சிலிக்கன் நைட்ரைடின் மூலக்கூற்று வாய்ப்பாடு Si3N4 ஆகும்[3] Carbon's importance to life is primarily due to its ability to form numerous bonds with other elements.[4]. GeH4 மற்றும் Ge2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை செருமேனியம் உண்டாக்குகிறது அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் செருமேனியம் வினைபுரிந்து டெட்ராஆலைடுகளை உருவாக்குகிறது. புரோமின் மற்றும் அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் செருமேனியம் வினைபுரிந்து டை ஆலைடுகளை உருவாக்குகிறது. பொலோனியம் தவிர மற்ற ஒற்றை சால்கோகென்கள் அனைத்துடன் இது வினைபுரிகிறது. டை ஆக்சைடுகள். டை சலபைடுகள், டை செலீனைடுகள் போன்ற சேர்மங்களையும் செருமேனியம் உருவாக்குகிறது. செருமேனியம் நைட்ரைடின் மூலக்கூற்று வாய்ப்பாடு Ge3N4 ஆகும் [5]. SnH4 மற்றும் Sn2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை வெள்ளீயம் உண்டாக்குகிறது. அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் வெள்ளீயம் வினைபுரிந்து டெட்ராஆலைடுகளையும் டை ஆலைடுகளையும் உருவாக்குகிறது. பொலோனியம் தவிர மற்ற அனைத்து இயற்கையில் தோன்றும் சால்கோகென்களுடனும் இது வினைபுரிந்து சால்கோகெனைடுகளைத் தருகிறது [6]. PbH4 என்ற ஐதரைடை ஈயம் உண்டாக்குகிறது. ஈயம் குளோரின் மற்றும் புளோரின் இவற்றுடன் வினைபுரிந்து டை ஆலைடு மற்றும் டெட்ரா ஆலைடுகளைக் கொடுக்கின்றது. புரோமினுடன் டெட்ரா புரோமைடைத் தருகிறது. டெட்ரா புரோமைடும் டெட்ரா அயோடைடும் நிலைப்புத் தன்மை அற்றவை.நான்கு ஆக்சைடுகளையும், சல்பைடு, செலீனைடு, தெலூரைடு போன்ற சேர்மங்களை ஈயம் உண்டாக்குகிறது [7]. பிளெரோவியத்தின் சேர்மங்கள் ஏதும் அறியப்படவில்லை [8].
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia