பயனர் பேச்சு:Inbamkumar86
முதற்பக்கக் கட்டுரை
உங்களுக்குத் தெரியுமா?
புதிய பேச்சுக்கள்வணக்கம் இராஜ்குமார். மேலே உள்ள தொகுப்புப் பெட்டியில் (தங்களுக்கு உதவுமானால்) 1, 2 என உள்ள பக்கங்களில் தாங்கள் பழைய தொகுப்புகளைப் பரணேற்றலாம். அதற்காக பயனர் பேச்சு:Inbamkumar86/1 போன்ற பயனர்வெளிப் பக்கங்களை தனியே உருவாக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:39, 7 மே 2013 (UTC) இது உதவுமாயின் வைத்துக்கொள்ளலாம். தேவையில்லை எனில் நீக்கிவிடலாம். தஙக்ள் விருப்பம் :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:42, 7 மே 2013 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்வணக்கம், Inbamkumar86! ![]() நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:11, 2 சூன் 2013 (UTC) தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:02, 24 சூன் 2013 (UTC) தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்புவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC) நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?வணக்கம். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:28, 2 அக்டோபர் 2013 (UTC)
மின்னணுவியல் வலைவாசலை மேம்படுத்தி தர கோரிக்கைவணக்கம் நண்பரே, தாங்கள் வலைவாசல்:மின்னணுவியல் என்பதை உருவாக்கி மேம்படுத்தியிருப்பதைக் கண்டேன். அந்த வலைவாசல் 15 கணினி திரைக் கொண்டதில் முழுவதுமாக தெரியவில்லை. வடிவமைப்பினை சரி செய்ய வேண்டுகிறேன். தற்போது நமது விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்தில் மின்னணுவியல் தொடர்பான மேலும் பல சிறப்புக் கட்டுரைகளையும், சிறப்புப் படங்களையும் காட்சிபடுத்த வேண்டுகிறேன். நன்றி--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:10, 11 அக்டோபர் 2013 (UTC) வேண்டுகோள்வணக்கம். பேச்சு:பிராவைஸ் அணிக்கோவை பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 05:05, 14 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைகளை இணைக்க முன்மொழிவுவணக்கம் இன்பகுமார் தாங்கள் உருவாக்கிய இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா? கட்டுரை முன்னரே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்) என்கிற பெயரில் இருக்கிறது. எனவே இரண்டையும் இணைக்க முன்மொழிந்துள்ளேன். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:41, 15 அக்டோபர் 2013 (UTC) பதக்கம்
நன்றியுரைத்தல்
மிக்க நன்றி
குறுங்கட்டுரைகள்வணக்கம் ராச்குமார், உங்கள் கட்டுரைகளை ஓரளவு விரிவுபடுத்தி எழுதினால் சிறப்பாக இருக்கும். வெறுமனே வரைவிலக்கணங்களோடு நின்று விடாது விளக்கமும் சேர்த்து எழுதப் பாருங்கள். ஈட்டம் கட்டுரையில் மேலும் விளக்கம் சேர்ப்பது நல்லது. அத்துடன், உங்கள் கட்டுரைகளுக்கு wikidata வில் இணைப்புத் தாருங்கள். தானியங்கிகள் பெருமளவு இப்போது இயங்குவதில்லை.--Kanags \உரையாடுக 08:58, 16 அக்டோபர் 2013 (UTC)
தறுவாய்?குமார், தறுவாய் உந்துக் கட்டுப்பாட்டகம் என்றால் என்ன? அதன் ஆங்கிலப் பெயர் தெரிந்திருப்பின் கட்டுரையில் அடைப்புக்குறிகளுக்குள் சேர்த்துவிடவும். என்னைப் போன்றோருக்கு உதவும். மேலும், ஆங்கிலக் கட்டுரை இணைப்பிருப்பின் இணைக்கவும் :) எ.கா: 2013 போகோல் நிலநடுக்கம் நன்றி. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 16:48, 16 அக்டோபர் 2013 (UTC) விக்கித்திட்டம் திரைப்படம் தொடங்க ஆலோசனைவணக்கம் நண்பரே, தாங்கள் திரைப்படங்கள் குறித்தான எண்ணற்ற கட்டுரைகளை தொடங்கி தரமானதாக மேம்படுத்தி வருவதைக் கண்டேன். ஒத்த விருப்பத்துறையை சேர்ந்த பயனர்களை ஒருங்கினைத்து அத்துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்தி வழிநடத்த விக்கிப்பீடியாவில் விக்கித்திட்டம் என்பது உள்ளது. அதனை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். நம்முடைய தமிழ் விக்கிப்பீடியாவில் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம் என்பது துவங்கப்படாமல் உள்ளது. தங்களைப் போன்ற திரைப்பட துறை ஆர்வமுடையவர்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்த இத்திட்டம் உதவியாக இருக்கும். தாங்கள் விரும்பினால் திரைப்பட விக்கித்திட்டத்தினை துவங்கலாம். மேலும் விக்கித்திட்டம் பற்றி அறிந்து கொள்ள காண்க - விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பௌத்தம், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:10, 17 அக்டோபர் 2013 (UTC)
நன்றி நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:29, 18 அக்டோபர் 2013 (UTC) வாங்க, வாங்க...வணக்கம்! நல்லா தூங்கி எழுந்திட்டிங்களா? இன்னைக்கு என்ன முடிவோட வந்திருக்கிங்க? தொடர்ந்து 24 மணி நேரமா அல்லது 48 மணி நேரமா? தொடர்ந்து எவ்வளவு நேரத்துக்கு தொகுக்க முடிவு?! வியக்க வைக்கிறீர்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:22, 20 அக்டோபர் 2013 (UTC)
உங்களின் சில தொகுப்புகளின் விவரத்தில் 'Tag:VisualEditor' என்பதனைக் காண்கிறேன். இதன் அர்த்தம் என்ன? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:55, 22 அக்டோபர் 2013 (UTC)
ஐபேட் vs. ஐபாட்பழ. நீங்கள் அண்மையில் உருவாக்கிய ஐப்பாடு ஆர் என்பது ஐபேட் ஏரைக் குறிக்கிறது. ஆனால், நீங்கள் அக்கட்டுரையில் உள்ளிணைப்பை ஐபாட் என்ற கட்டுரைக்குக் கொடுத்டுள்ளீர்கள். மாற்றுவதற்கு முன் உங்கள் விளக்கத்தைக் கேட்க விரும்புகிறேன். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 16:07, 25 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழுநிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 28 அக்டோபர் 2013 (UTC)
தலைவர்தொண்டர்கள் Rajasekarsalemkknagar (பேச்சு) 17:30, 8 நவம்பர் 2013 (UTC) பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம் படிமம்:Sony-alpha-7r.jpg![]() படிமம்:Sony-alpha-7r.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இக்கோப்பின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாத படிமம் என்றும் இது நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெறும் எனவும் குறிக்கின்றது. ஆயினும் இப்படிமம் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இது முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இது நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இது பயனுள்ள படிமம் என நீங்கள் கருதினால் இதை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்). விரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:44, 4 திசம்பர் 2013 (UTC) நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்புவணக்கம். தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பான ஐவர் குழுவில் பணியாற்றிய ஒருவர் என்ற முறையில், இக்கோரிக்கை இப்பொழுது வாக்கெடுப்புக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:42, 5 மார்ச் 2014 (UTC) நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவி தேவைவணக்கங்க, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில குறுங்கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா? பல தரப்பட்ட தலைப்புகள் குறித்து ஆர்வமும் பங்களிப்பு முனைப்பும் உடையோர் தமிழ் விக்கிப்பீடியாவில் வெகு சிலரே. எனவே, கட்டுரைகளைத் துவக்கியோரே மெனக்கட்டால் ஒழிய பல்வேறு தலைப்புகள் முன்னேற்றம் காண்பதில்லை. தற்போது இவ்வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில கட்டுரைகளில் தங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு, மசோயிசம். எனவே, இவற்றை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம் என்று கருதி இத்தகவலை இடுகிறேன். மற்றபடி, வழமை போல் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் குறிப்பிடத்தக்கமையும் போதிய உள்ளடக்கமும் உள்ள தரமான குறுங்கட்டுரைகளை உருவாக்குவத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:14, 12 மே 2014 (UTC) ![]() வணக்கம் Inbamkumar86! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:45, 17 மே 2014 (UTC) விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு![]() வணக்கம் Inbamkumar86! முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்வணக்கம், நலமா? அடுத்த இரு வாரங்களுக்குத் தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். நீண்ட விடுப்பில் இருக்கும் நீங்கள் முன்பு போல் அடிக்கடி வந்து சிறப்பான பங்களிப்புகளைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 10:10, 14 ஏப்ரல் 2015 (UTC) தானியங்கி வரவேற்புவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:52, 7 மே 2015 (UTC) விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:30, 8 சூலை 2015 (UTC) வேண்டுகோள்...வணக்கம். தாங்கள் எழுதும் கட்டுரைகளில் குறைந்தது ஒரு மேற்கோளாவது ஆரம்பநிலையில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் விக்கித்தரவுகளையும் இற்றை செய்துவிடுங்கள். பராமரிப்பு வார்ப்புருக்கள் தரும் சங்கடத்தை தவிர்க்கலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:43, 9 மார்ச் 2016 (UTC) விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்![]() விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன. 3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC) விக்கிக்கோப்பை 2016விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC) விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :) தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி! -- இரவி விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்![]() விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன. 3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC) விக்கிக்கோப்பை![]() வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள். போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!.. .
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:11, 9 திசம்பர் 2016 (UTC) கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புஅன்புள்ள இராஜ்குமார், உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல். 2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன். இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்: தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன். நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்: இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது. 2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது. அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது. இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று. ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும். இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும். வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 15:45, 24 மார்ச் 2018 (UTC) பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்வணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:46, 19 சூன் 2019 (UTC) 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. |
Portal di Ensiklopedia Dunia