பாரத ஓவர்சீசு வங்கி
பாரத ஓவர்சீசு வங்கி இந்தியாவின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த இந்திய தனியார்த் துறை வங்கியாகும். 2007ஆவது ஆண்டில் இவ்வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைக்கப்பட்ட போது, இவ்வங்கியில் பணியாற்றிய பணியாளர்களையும், சொத்துகள் மற்றும் இதன் வைப்புகளையும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தன்னகத்தே இணைத்துக் கொண்டது. தொடக்கம்பாரத ஓவர்சீசு வங்கி, பாங்காக்கில் இயங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையை கையகப்படுத்தும் பொருட்டு தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் கிளைகளைத் துவங்க, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்த ஒருசில இந்திய வங்கிகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் இது ஒன்றே தாய்லாந்து நாட்டில் கிளைகள் தொடங்கிய இந்திய வங்கியாகும். இணைப்புபாரத ஓவர்சீசு வங்கி, ஏழு இந்திய வங்கிகளால் இணைந்து தொடங்கப்பட்டது. கீழ்க்காணும் ஏழு வங்கிகள், இவ்வங்கியின் உரிமையாளர்களாகும். அவையாவன: (உரிமையின் அளவு விழுக்காட்டில் உள்ளது) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (30%), ராஜஸ்தான் வங்கி (16%), வைசியா வங்கி (14.66%), கரூர் வைசியா வங்கி (10%), பெடரல் வங்கி (19.67%), சௌத் இந்தியன் வங்கி (10%), கர்நாடக வங்கி (8.67%). ஆனால், 2007ஆவது ஆண்டில் இவ்வங்கியின் மொத்த உரிமையையும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியே வாங்கிக் கொண்டது.[1] [2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia