பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி
பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் என்பது இந்தியாவில் செயல்பட்டுவரும் 26 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். மேலும் இவ்வங்கி பாரத ஸ்டேட் வங்கியின் 6 துணை வங்கிகளில் ஒன்றாகும். 2014 ஆவது ஆண்டு நிலவரப்படி இவ்வங்கி 1,140 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இக்கிளைகளில் பெரும்பாலானவை ராஜஸ்தான் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.[1][2][3][4] 2016 ஆம் ஆண்டில், பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளான பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு இந்திய அரசு 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இறுதியாக 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.[5]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia