மலேசியப் பொதுத் தேர்தல், 1990
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாட்களில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 351 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை. இதன் விளைவாக அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 180 இடங்களில் 148 இடங்களை வென்றது. வாக்குப்பதிவு 57.28%. கிளாந்தான் மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான அங்காத்தான் பெர்பாடுவான் உம்மா (Angkatan Perpaduan Ummah) அனைத்து 39 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அவற்றில் 24 இடங்கள் மலேசிய இசுலாமிய கட்சிக்கும்; மற்றும் 15 இடங்கள் செமாங்கட் 46 (Semangat 46) கட்சிக்கும் கிடைத்தன.[1][2] பொதுமலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மாநிலங்களின் சட்டப் பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநிலப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.[3] தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரைப் பிரதமர் அல்லது பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக்கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[4] தேசியப் பொதுத் தேர்தல்மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது. ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia