வெள்ளை குறுவை கார் (நெல்)
வெள்ளை குறுவை கார் (Vellai Kuruvi Kar) பாரம்பரிய நெல் பட்டியலில் இடம்பிடித்துள்ள இவ்வகை நெல் தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்றப் வட்டாரங்களில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும். 25 - 30 நாட்கள் (நாற்றங்கால்) நாற்று வளர்ப்பு உட்பட, 125 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சுமார் 100 - 120 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக் கூடியதாகும். வெள்ளை குறுவை காரின் தானிய மணிகள், மற்றும் வைக்கோல் ஆகியவை வெளிறிய மஞ்சள் நிறத்திலிருந்து, அழுக்கான வெள்ளை நிறமாகத் தோற்றமளிப்பதாக உள்ளது. மேட்டுப்பாங்கான நிலப்பகுதியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் இரகம், நேரடி விதைப்பு முறைக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.[1] பருவகாலம்130 - 135 நாட்கள் வயதுடைய இந்த வெள்ளை குறுவை கார் யூலை மாதம் முதல், ஆகத்து மாதம் முடிய உள்ள முன் சம்பா பருவத்திலும் (பட்டம்), செப்டம்பர் மாதம் முதல், அக்டோபர் மாதம் முடிவாக உள்ள பின் சம்பா பருவத்திலும் ஏற்றதாகும்.[1][2]
இவற்றையும் காண்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia