ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி
ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Hang Tuah Jaya; ஆங்கிலம்: Hang Tuah Jaya Federal Constituency; சீனம்: 汉都亚再也国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P137) ஆகும்.[5] ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2018-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2018-ஆம் ஆண்டில் இருந்து ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] மத்திய மலாக்கா மாவட்டம்மத்திய மலாக்கா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம்; அலோர் காஜா மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாவட்டம் ஆகும். ஆங் துவா ஜெயா மக்களவை தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆங் துவா ஜெயா நகரம் என்பது பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடுகளுடன், மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மையமாகவும்; அறிவார்ந்த மாநகரமாகவும், மலாக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நகராட்சியாகும்.[7] ஆங் துவா ஜெயா புறநகர் நிலப்பகுதியின் பங்கு முக்கியமானது. ஏனெனில் மலாக்கா மாநில அரசின் நிர்வாக மையம் இந்த ஆங் துவா ஜெயா நகராட்சி நிர்வாகத்திற்குள் அமைந்துள்ளது. ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகள்
சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆங் துவா ஜெயா தேர்தல் முடிவுகள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia