ஜாசின் மக்களவைத் தொகுதி
ஜாசின் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Jasin; ஆங்கிலம்: Jasin Federal Constituency; சீனம்: 野新国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P139) ஆகும்.[5] ஜாசின் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து ஜாசின் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] ஜாசின் மாவட்டம்ஜாசின் மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் ஒன்றாகும். கிழக்கே ஜொகூர் மாநிலத்தின் தங்காக் மாவட்டம்; வடக்கே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டம்; மேற்கில் அலோர் காஜா மாவட்டம்; மற்றும் மத்திய மலாக்கா மாவட்டம்; ஆகியவை எல்லைகளாக உள்ளன. ஜாசின் மாவட்டம் 20 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அதன் தலைநகரம் ஜாசின். மலாக்கா மாநிலத்தில் ஜாசின் மாவட்டம் மிகப் பெரிய மாவட்டமாகும். மாநில பரப்பளவில் 41.47% அளவு கொண்டது. கீசாங் நதி ஜாசின் நகரத்தின் வழியாகச் செல்கிறது. கீசாங் நதி, ஜாசின் புதிய நகரத்தையும் பழைய நகரத்தையும் மையப் பகுதியில் பிரிக்கிறது. ஜாசின் மாவட்டம் ஏறக்குறைய 75% தட்டையான சமவெளி கொண்டது. எந்தப் பகுதியும் கடல் மட்டத்தில் இருந்து 50 மீட்டர் உயரத்திற்கு மேல் இல்லை.[7] ஜாசின் மக்களவைத் தொகுதி
ஜாசின் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia