தங்கா பத்து மக்களவைத் தொகுதி
தங்கா பத்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tangga Batu; ஆங்கிலம்: Tangga Batu Federal Constituency; சீனம்: 冬牙峇株国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P136) ஆகும்.[5] தங்கா பத்து மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து தங்கா பத்து மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] மத்திய மலாக்கா மாவட்டம்மத்திய மலாக்கா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம்; அலோர் காஜா மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாவட்டம் ஆகும். தங்கா பத்து மக்களவை தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆங் துவா ஜெயா நகரம் என்பது மத்திய மலாக்கா மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய நகரம். பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடுகளுடன், மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மையமாகவும்; அறிவார்ந்த மாநகரமாகவும், மலாக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நகராட்சியாகும்.[7] ஆங் துவா ஜெயா புறநகர் நிலப்பகுதியின் பங்கு முக்கியமானது. ஏனெனில் மலாக்கா மாநில அரசின் நிர்வாக மையம் இந்த ஆங் துவா ஜெயா நகராட்சி நிர்வாகத்திற்குள் அமைந்துள்ளது. தங்கா பத்து மக்களவைத் தொகுதி
தங்கா பத்து தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia