ஆரணி கோட்டை
ஆரணி கோட்டை என்பது தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் அமைந்துள்ள கோட்டையாகும். தொண்டை மண்டலத்தில், பல்லவர்கள் வரலாற்று பக்கங்களில் தனியிடத்தை பிடித்திருப்பது ஆரணி பகுதியாகும். பிற்கால சோழர்கள் ஆட்சிகாலத்தில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர்களின் வழித்தோன்றலின் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் ஆவார்கள். இவர்கள் படைவீட்டை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்களின் மூதாதையர்களின் நிலைநாட்ட முயன்றனர். ஆரணி மண்டலேஷ்வரர்கள் தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை. இந்த கோட்டைக்காக ஆரணியை அடுத்த படைவீட்டை சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுத கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது. அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்தன. இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன.[1] வரலாற்று சின்னமாக கருதப்படும் ஆரணி கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள இராபர்ட் கெல்லியின் நினைவுத்தூண் பொ.ஊ. 1760 ல் நடந்த கர்நாடகப் போரில் ஆற்காடு கோட்டையும், ஆரணி கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் சென்றது. அப்போது மதுரையை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம் மற்றும் ராபர்ட் கெல்லி கிழக்கிந்திய படை கம்பெனிக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினார். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும்பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த இராபர்ட் கெல்லி மற்றும் கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதனையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia