நாகர்கர் கோட்டை![]() நாகர்கர் கோட்டை (Nahargarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் செய்ப்பூர் நகரத்திற்கு அருகில், ஆரவல்லி மலைத்தொடர் முனையில் அமைந்துள்ளது. நாகர்கர் கோட்டை அருகில் ஜெய்கர் கோட்டை மற்றும் ஆம்பர் கோட்டைகள் அமைந்துள்ளது. மன்னர் நாகர்சிங் பொமிய என்பவரால் இக்கோட்டைக்கு நாகர்கர் எனப்பெயராயிற்று.[1] [2] [3] வரலாறு![]() செய்ப்பூர் நகரத்தை நிறுவிய ஜெய்பூர் இராச்சிய மன்னர் சவாய் இரண்டாம் ஜெய்சிங் என்பவர், மராத்தியப் படைகளையும், ஆங்கிலக் கம்பெனிப் படைகளை எதிர்கொள்ளவும், கிபி 1734ல் நாகர்கர் கோட்டை நிறுவினார். [4] 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, ஆங்கிலேய ஆட்சியாளர்களின் குடும்பங்கள் இக்கோட்டையில் பாதுகாப்பாக தங்கினர்.[5] 1868ல் நாகர்கர் கோட்டை விரிவு படுத்தப்பட்டது. 1883-92ல் நாகர்கர் கோட்டையில் மூன்றை இலட்சம் ரூபாய் செலவில் அரண்மனைகள் கட்டப்பட்டது.[6] ஜெய்ப்பூர் மன்னர் சவாய் மதோ சிங், அரண்மனை குடும்பத்தினர்களுக்காக, கோட்டையில் பல அறைகளுடன் கூடிய அரண்மனை கட்டினார்.[7] படக்காட்சியகம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia