கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே என்பது சன் தொலைக்காட்சியில் 2 நவம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி காதல் நாடகத் தொடர் ஆகும்.[1] இது தெலுங்கு மொழித் தொடரான 'பௌர்ணமி' மற்றும் கன்னட மொழித் தொடரான 'மானசரே' போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.[2] இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஏ.ஆர் பிலிம் என்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க, நிமிக்ஷிதா, ராகுல் ரவி, பிரித்திவிராஜ் மற்றும் நித்யா தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 4 மார்ச்சு 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 722 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. கதைசுருக்கம்அம்மா, தங்கை, பாட்டி என அனைவருக்கும் பிடித்த செல்ல பிள்ளையாக இருக்கும் மீரா. இவளின் மனதில் இனம் புரியாத கவலை. தந்தையின் பாசத்திற்கு ஏங்கி தவிக்கும்இவளுக்கு வீட்டில் எத்தனை பேர் பாசமாக பார்த்துக் கொண்டாலும், தந்தை போல் ஈடாகுமா என்பதே அவளின் கவலை. இவளுக்கு தந்தையிடம் கிடைக்காத பாசத்தை குடுக்க நினைக்கும் காதலன் யுவா. மீராவிற்கு தந்தையின் பாசம் கிடைக்குமா? என்பது தான் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
மீரா குடும்பத்தினர்
யுவா குடும்பத்தினர்
துணைக் கதாபாத்திரம்
சிறப்புத் தோற்றம்
நடிகர்களின் தேர்வுஇந்த தொடரில் தந்தை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிரித்திவிராஜ் நடிக்க, இவரின் மகள் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நிமிக்ஷிதாஎன்பவர் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக ராகுல் ரவி என்பவர் 'யுவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். பிரித்திவிராஜ் மனைவி கதாபாத்திரத்தில் திரைப்பட நடிகை இனியா மற்றும் நித்யா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இவரின் தாய் கதாபாத்திரத்தில் சுலக்சனா நடித்துள்ளார். நடிகர் லிவிங்ஸ்டன் என்பவர் யுவாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். முகப்பு பாடல்கண்ணான கண்ணே என்ற முகப்பு பாடலுக்கு 'ஜி கே வி' என்பவர் வரிகள் எழுத பிரபல பாடகி சித்ரா என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு 'சாம்' என்பவர் இசை அமைத்துள்ளார். ஒலிப்பதிவு
6. " அப்பா என் தெய்வம் " ரோஹித் 1:00 மதிப்பீடுகள்இந்த தொடர் ஆரம்பித்த முதல் வாரத்தில் 6.6 மில்லியன் பார்வையாளர் பதிவுகள் பெற்று தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.[6] கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia