காங்கேர்
காங்கேர் (Kanker), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த காங்கேர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெகதல்பூர் நகரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மலைக்காடுகள் சூழ்ந்த காங்கேர் நகரம், சிவப்பு தாழ்வாரம் எனப்படும் நக்சலைட் போராளிகளால் அரசுத் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக உள்ளது.[1]இது கடல் மட்டத்திலிருந்து 388 மீட்டர் உயரத்தில் உள்ளது.காங்கேர் நகரத்தில் தூத் ஆறு பாய்கிறது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 23 வார்டுகளும், 8724 வீடுகளும் கொண்ட காங்கேர் நகராட்சியின் மக்கள் தொகை 37,442 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,033 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,545 மற்றும் 9,405 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 86.76%, இசுலாமியர் 8.6%, பௌத்தர்கள் 0.89, சீக்கியர்கள் 0.27%, கிறித்தவர்கள் 1.3% மற்றும் பிறர் 1.66% ஆகவுள்ளனர்.[2]இந்நகரத்தில் இந்தி மொழி, சத்திசுகரி மொழி மற்றும் ஹல்பி மொழிகள் பேசப்படுகிறது. போக்குவரத்துராய்ப்பூர்-ஜெகதல்பூர்-விஜயநகரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 3 காங்கேர் நகரம் வழியாகச் செல்கிறது.[3] படக்காட்சிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia