காட்டுக் குத்தாலம்

காட்டுக் குத்தாலம்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
121 - 125 நாட்கள்[1]
மகசூல்
எக்டேருக்கு சுமார் 750 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

காட்டுக் குத்தாலம் (Kattu Kuthalam) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். தென்னிந்திய உணவு வகைகளான இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற இரகமாக உள்ள இதன் தானியம், தடித்தும் (மோட்டா இரகம்) அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.[1]

காலம்

குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 121 - 125 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா மற்றும் பின் சம்பா பருவத்தில் நடவு செய்யக்கூடிய இந்நெல் இரகம், நாற்றங்கால் வயது 30 நாட்களாக உள்ளது.[1]

சாகுபடி

நாற்று விட்டு நடவு முறையில் சாகுபடி செய்யப்படும் இது, மணல் கலந்த களிமண் போன்ற நிலங்களில் பயிரிட ஏற்றதாக கூறப்படுகிறது. நீர் அதிகம் தேங்காத பகுதிகளுக்கு ஏற்ற இரகமாக உள்ள இந்நெல் இரகம், முதிர்ந்த நிலையில் மிதமாக சாய்ந்து விடக்கூடும் என கூறப்படுகிறது.[1]

மகசூல்

சராசரியாக 123.3 சதமமீட்டர் உயரமும், அதிகபட்சமாக 126.2 சதமமீட்டர் உயரமும் வளரக்கூடிய இந்த இரக நெற்கதிர்களின் நீளம், 21.8 - 23.3 சதம மீட்டராகவும், நெற்கதிரில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கை 82 - 89 என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் நெல்மணிகளின் எடை 31.636 கிராம் உள்ள இந்நெல் வகை, நெல்லின் மகசூல் ஒரு எக்டேருக்கு சராசரியாக 750 கிலோவாகவும் (10 மூடைகள்), வைக்கோலின் மகசூல் 1,050 (35 கட்டுகள்) கிலோவாகவும் உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]

நெல்மணியின் இயல்பு

காட்டுக் குத்தாலத்தின் நெல்மணிகளின் இயல்பானது, பூக்கும் பருவத்தில் இளம் பச்சை நிறமாகவும், பால்பிடிக்கும் நேரத்தில் கரும்பச்சையாகவும், முதிர்ச்சிப் பருவத்தில் அடர் மஞ்சள் மஞ்சள் நிறத்தில் நீண்ட கோடுகளுடன் காணப்படும்.[1]

வெளி இணைப்புகள்

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "பாரம்பரிய நெல் இரகங்கள் - பக்கம் 66-67" (PDF). nammanellu.com (தமிழ்) - சனவரி 2001. Retrieved 2025-07-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya