காந்தி ஸ்மாரக் சங்கராலயா ( காந்தி நினைவு நிறுவனம்), அகமதாபாத்காந்தி ஸ்மாரக் சங்கராலயா (காந்தி நினைவு நிறுவனம்) என்பது இந்தியத் தலைவரான மகாத்மா காந்தியின் பணியையும், அவரைப் பற்றிய வாழ்க்கை நினைவுகளைப் பாதுகாத்து வைத்து நினைவுகூரவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகம் மற்றும் பொது சேவை நிறுவனமாகும். இது இந்தியாவின் அகமதாபாத் மாநிலத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதில் காந்தி பிறருக்கு எழுதிய மற்றும் காந்திக்கு பிறர் எழுதிய பல்லாயிரக்கணக்கான கடிதங்களும், புகைப்படங்களும் நூல்களும் உள்ளன.[1] தொடக்கம்இது 1958 ஆம் ஆண்டு புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் சார்லஸ் கொரியா என்பவரால் தொடங்கி வடிவமைக்கப்பட்டது. கொரியாவின் முதல் முக்கியமான அமைப்பாக இந்த அருங்காட்சியகத்தில் முதலில் 51 மாடூலர் பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் 6 மீட்டர் x 6 மீட்டர் என்ற அளவில் அமைக்கப்பட்டது, அதனைச் சுற்றி நீர் நிலை அமைக்கப்பட்டது. இந்த வளாகத்தை 1963 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார்.[1] அமைப்புஇந்த நினைவு அருங்காட்சியகமானது காந்தி 1917 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவரது நூல்கள் கடிதங்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டுள்ள இந்த அடக்கமான செங்கற்களைக் கொண்டும், கல் தளங்களைக் கொண்டும், டைல்ஸ் பொருத்தப்பட்ட கூரைகளைக் கொண்டும் கட்டப்பட்டது. சுதேசியின் எண்ண வெளிப்பாடு தோன்றும் வகையில் இந்த கட்டட பாணி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கட்டட அமைப்பு, கட்டிடக் கலைஞரின் முதல் முக்கியமான பணியாகும். தனியார் பயன்படுத்திய முறையினை தகவமைத்து இது கட்டப்பட்டது. காந்தியின் எளிமையான வாழ்க்கை முறையையும், இயற்கையான வாழும் சூழலை கொண்ட நிலையையும் பிரதிபலிக்கும் பொருட்டு, கட்டிடக் கலைஞர் 6 மீட்டர் x 6 மீட்டர் அளவில் வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் இணைப்போடு இதனை உருவாக்கியுள்ளார். திறந்த மற்றும் மூடப்பட்ட நிலையில் அமைந்த அமைப்புகள் முதலில் கட்டப்பட்டு, பின்னர் அவை விரிவாக்கம் செய்யப்பட்டன. மாடூலர் அமைப்பில் அமைந்த எளிமையான முறை கட்டட அமைப்பு அதனைக் கட்டப்பட்ட அடிப்படை பொருட்களின் பயன்பாட்டுக் கட்டமைப்பினை வெளிப்படுத்துகிறது. அதில் எளிமை மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது. இங்கே காணப்படுகின்ற அடிப்படை கட்டுமானப் பொருள்களான கல் தளங்கள், செங்கல் சுவர்கள், மரக் கதவுகள் மற்றும் கண்ணாடி இல்லாத ஜன்னல்கள், மற்றும் கூரை அமைப்புகள் அதனை வெளிப்படுத்துகின்றன.இந்திய கிராமங்களில் காணப்படுகின்ற பாணியினை ஒட்டி கட்டட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நீர் நிலையும் அவ்வாறே இங்கு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.[2] காந்தி நினைவு அறக்கட்டளையின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட இது தனித்துவத் தன்மை கொண்டதாகும். ஒரு தனிப்பட்ட அதாவது வேறு எங்கும் பல அருங்காட்சியகங்கள் ஒரே ஆளுமையான நன்கு நினைவுகூரப்பட்ட நபரான காந்தியின் நியாயமான மனிதாபிமானம், அன்பு, உண்மை, அகிம்சை மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டு இது அமைந்துள்ளது எனலாம். அதன் திட்டங்கள் மற்றும் அருங்காட்சியகமாக அதன் ஒருங்கிணைந்த அணுகுமுறை ஆகியவற்றின் காரணமாக இது சிறப்பாக கருதப்படுகிறது. காந்திஜியின் வாழ்க்கை மற்றும் தத்துவத்தின் அம்சங்களை சித்தரிக்கும் பல காட்சியகங்களைக் கொண்டு அமைந்துள்ள நிலையில் இதன் தனித்தன்மையை உணரலாம். இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் வெவ்வேறு கட்டங்களின் பிரதிபலிப்பை இங்கு காண முடியும்.[3] சிறப்பு அம்சங்கள்சுற்றியுள்ள நீர்நிலை, எம்.கே. காந்தியின் அலுவலகம் மற்றும் பார்வையாளர் அறை, அலுவலகம், ஆசிரமம் மற்றும் முன்கூடம், ஹிர்தயகுன்ச், வினோபா குடில், மீனாபாய் குடில் போன்றவை இங்குள்ள சிறப்பு அம்சங்களாகும். இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia