ஹரிலால் காந்தி
ஹரிலால் காந்தி (Harilal Mohandas Gandhi) (தேவநாகரி: हरीलाल गांधी), (பிறப்பு:1888 –இறப்பு: 18 சூன் 1948), மகாத்மா காந்தியின் மூத்த மகன் ஆவார்.[1] வாழ்க்கைக் குறிப்புஹரிலால் இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் தொழிலுக்குக் கல்வி பெற விரும்பியதை, மகாத்மா காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை.[2] எனவே ஹரிலால் குடும்ப உறவுகளை 1911இல் துறந்தார். இஸ்லாம் சமயத்திற்கு மாறித் தன் பெயரை அப்துல்லா காந்தி என்று வைத்துக் கொண்டார்.[3] பலரின் வற்புறுத்தலால் மீண்டும் தாய் சமயமான இந்து சமயத்திற்கே திரும்பி விட்டார்.[4] ஹரிலால் குலாப் என்பரை மணந்து ஐந்து குழந்தைகளுக்கு தந்தையானர். ஹரிலாலின் மூத்த மகளான ரமிபென்னின் மகளான நீலம் பரிக் என்பவர் ஹரிலால் குறித்தான காந்திஜி இழந்த இறுதி அணிகலன்:ஹரிலால் காந்தி என்ற தலைப்பில் வரலாற்று நூலை எழுதியுள்ளார். ஹரிலாலின் வாழ்க்கை குறித்து பகுபாய் தலால் என்பவரும் ஒரு நூலை எழுதியுள்ளார்.[5] காந்திஜியின் இறுதிச்சடங்கின் போது காணப்பட்ட ஹரிலால், பின்னர் கல்லீரல் நோய் காரணமாக 18 சூன் 1948 அன்று மும்பை நகராட்சி மருத்துவமனையில் மரணமடைந்தார்.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia