கின்னௌர் மாவட்டம்
கின்னௌர் இந்தியாவில் உள்ள இமாசலப் பிரதேச மாநிலத்தின் 12 மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டம் பூஃ, கல்பா, நிச்சார் என மூன்று நிர்வாக பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கின்னௌர் மாவட்டத்தின் தலைமையகம் ரேக்காங் பியோ. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கின்னௌர் மாவட்டம் இமாசலப் பிரதேச மாவட்டங்களில் லாஹௌல் - ஸ்பிதி மாவட்டத்திற்கு பிறகு இரண்டாவது மிகக்குறைந்த மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்..[1] மக்கள் வகைப்பாடு2011 கணக்கெடுப்பின்படி கின்னௌர் மாவட்டத்தின் மக்கட்தொகை 84,298 .[2] இது தோராயமாக அண்டோரா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன்மூலம் இந்தியாவின் 640 மாவட்டங்களில் இது 620வது இடத்தில் உள்ளது.[2] கின்னௌர் மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 13 inhabitants per square kilometre (34/sq mi) .[2] இதன் மக்கட்தொகை வளச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 7.61%.[2]கின்னெளரின் பாலின விகிதப்படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 818 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கல்வியறிவு விகிதம் 80.77%.[2]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia