சோலன்
![]() சோலன் (Solan) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத் தலைமையிட நகரமும், நகராட்சியுமாகும். இமயமலையில் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்நகரம், மாநிலத் தலைநகரம் சிம்லாவின் தெற்கில் 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம், இந்தியாவின் சிறந்த மலைவாழிடமும், சுற்றுலாத் தலமும் ஆகும். [1] முன்னாள் பிரித்தானிய இந்தியாவின் சுதேச சமஸ்தானமான பகத் இராச்சியத்தின் தலைநகரமாக சோலன் நகரம் விளங்கியது.[2] வேளாண்மைஇந்நகரத்தில் காளான் வளர்ப்பு பெருமளவு நடைபெறுவதால், இந்நகரத்தை காளான் நகரம் என்றும் அழைப்பர், காளான் ஆய்வு இயக்குனரகம் சோலன் நகரத்தில் உள்ளது. இங்கு தக்காளி விளைச்சல் பெருமளவில் உள்ளது. மேலும் இந்நகரம் கோடைக் காலச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.[3] உலகப் பாரம்பரியக் களம்சண்டிகர் மற்றும் சிம்லா இடையே மலைகள் வழியாகச் செல்லும் கல்கா-சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் சோலன் நகரம் உள்ளது. சோலன் நகரம் வழியாகச் செல்லும் கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.[4] மக்கள்தொகை பரம்பல்2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 3343 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சோலன் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 39,256 ஆகும். மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 21,182, பெண்கள் 18,074 ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 93.02 % ஆக உள்ளது. இந்து சமய மக்கள் தொகை 93.05% ஆகவுள்ளது. இசுலாம், சீக்கியம், கிறித்தவம், பௌத்த சமயத்தவர்கள் 6.95% ஆக உள்ளனர். இங்கு இந்தி மொழி, ஆங்கிலம் மற்றும் பகாரி மொழிகள் பேசப்படுகிறது. சோலன் நகரம் 13 வார்டுகள் கொண்ட நகராட்சி கொண்டது.[5] படக்காட்சிகள்
தட்பவெப்பம்இமயமலையில் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்த சோலன் சமச்சீரான தட்பவெப்ப நிலை கொண்டது. கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 32 °C (90 °F) வெப்பமும், குளிர்காலத்தில் குறைந்தபட்சமாக −4 °C (25 °F) வெப்பநிலை உள்ளது. [6][7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia