அடல் சுரங்கச்சாலை
அடல் சுரங்கச்சாலை (Atal Tunnel) (முன்னர் ரோத்தங் சுரங்கச்சாலை), முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவாக ரோதங் கணவாய் பகுதியில் உள்ள இச்சரங்கச்சாலைக்கு பெயரிடப்பட்டுள்ளது. பிர் பாஞ்சல் மலைத்தொடருக்கு கிழக்கே இமயமலையில் அமைந்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரோதங் கணவாய்ப் பகுதியில் மலைகளைக் குடைந்து நிறுவப்பட்ட அடல் சுரங்கச்சாலை, லே-மணாலி நெடுஞ்சாலையில் உள்ளது. இச்சுரங்கச்சாலையில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு வழித்தடங்கள் கொண்டது. அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அடல் சுரங்கச்சாலை 9 கிலோ மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இச்சுரங்கச்சாலையால், மணாலி - லே இடையேயான பயணத் தொலைவு 46 கிலோ மீட்டர் குறையும். அடல் சுரங்கச்சாலை இமயமலையில் 3,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இச்சுரங்கப்பணி அக்டோபர் 2017-இல் முடிவுற்றது. அடல் சுரங்கப்பாதை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது. சுரங்கச்சாலையின் சிறப்புகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia