நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அதிக உயர பயிற்சி மையம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அதிக உயர விளையாட்டுப் பயிற்சி மையம் (Netaji Subhash High Altitude Training Centre) என்பது அதிக உயர பயிற்சி மையம் என்றழைக்கப்படுகிறது. இது இந்திய விளையாட்டு ஆணையத்தின் விளையாட்டு கல்வி அலகின் ஒரு பகுதியாகும். இந்த பயிற்சி மையமானது சிம்லா நகாில் இருந்து 52 கி.மீ. தொலைவில் மலையின் மீது உள்ள சில்லாரூ என்ற இடத்தில் உள்ளது.[1] இந்த பயிற்சி மையமானது 78 ஏக்கர் பரப்பளவில் 8000 அடி உயரத்தில் பரந்து விாிந்துள்ளது. பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களும் இங்கு உள்ளது. இந்த மையத்தின் முக்கிய நோக்கம் வீரர்கள் அதிக உயரமாக உள்ள பகுதிகளில் விளையாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி கொள்ள உதவுவதே ஆகும். வரலாறு1984 ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அதிக உயர பயிற்சி மையமானது இந்திய விளையாட்டு ஆணையத்தால் நிறுவப்பட்டது. இடங்களை பாிசீலனை செய்த பின்பு தட்பவெப்பநிலையைக் கருத்தில் கொண்டு சில்லாரூ தேர்வு செய்யப்பட்டது. ஏனெனில் இங்கு வீரர்களுக்கு பொறுதித் திறன், வலிமை, கடின பயிற்சி செய்த பிறகு விரைவாக மீருதல் போன்ற உடற் கூறுகளை பெறுவர். குத்துச் சண்டை, ஹாக்கி, ஜுடோ, மல்யுத்தம் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டுகளில் தேசிய அளவிலான வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக இந்த அதிக உயரமான பயிற்சி மையம் நிறுவப்ட்டது.[2][3][4] விளையாட்டு வசதிகள்
இந்திய விளையாட்டு ஆணையத்தால் சில்லாரூ விளையாட்டு அரங்கம் 2010 -ல் நிறுவப்பட்டு பராமாிக்கப்பட்டு வருகிறது. சிந்தடிக் டர்ப் தளவசதியுள்ள மைதானமாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia