மண்டி நகரம்
மண்டி (Mandi), இந்தியாவின் இமயமலையில் அமைந்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மண்டி நகரத்தை முன்னர் மண்டவ் நகர் என்று அழைக்கப்பட்டது.[3][4] அமைவிடம்மண்டி நகரம், மாநிலத் தலைநகரான சிம்லாவுக்கு வடக்கே 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[5] மண்டி நகரம் வடமேற்கு இமயமலையில் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[6] மண்டி நகரத்தை 220 கிலோ மீட்டர் (140 மைல்) தொலைவில் உள்ள பதான்கோட் நகரத்துடன் தேசிய நெடுஞ்சாலை எண் 20, இணைக்கிறது. மணாலியிலிருந்து சண்டிகர் 184 கி.மீ. தொலைவில் உள்ளது.[7]புதுதில்லி மணாலியிலிருந்து 441 கி.மீ. தொலைவில் உள்ளது.[8] மண்டியில் இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT), ஜவகர்லால் பொறியியல் கல்லூரி உள்ளது.[9] மக்கள்தொகை பரம்பல்6,627 வீடுகளும், 13 வார்டுகளும் கொண்ட மண்டி நகராட்சியின் 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 26,422 ஆகும். சராசரி எழுத்தறிவு 93.67% ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 981 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.80%, சீக்கியர்கள் 7.08%, இசுலாமியர் 1.54% ஆக உள்ளனர். பிற சமயத்தவர்கள் 0.58% ஆகவுள்ளனர்.[10] ![]() தட்ப வெப்பம்
படக்காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia