சேகர் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கே. பி. ருத்ராபதி இயக்குநர் ஏ. பி. நாகராசன் கீழ் பணியாற்றியவர்.[1] சேகர் குழந்தை கலைஞராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் நேரடி தமிழ் படமான பவித்ரா (1994) படத்தில் அஜித் குமாரின் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து அதன் மூலம் அறிமுகமானார. அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்திற்காக பிரபாசுக்கு பின்னணி குரல் கொடுத்தது அதன் வழியாக தொழில் வாழ்வில் ஏற்றம் கண்டார். விவேகம் படத்திற்காக விவேக் ஒபரோய்க்கு பின்னணி குரல் கொடுத்தார்.[3] இவரது மற்ற முக்கிய படங்களாக காதல் தேசம், உள்ளம் கேட்குமே,பயணம் ஆகியவை அடங்கும். மலரினும் மெல்லிய (2011) படத்திற்காக சிறந்த ஆண் பின்னணி குரல் கலைஞருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை பெற்றார். இவர் முக்கியமாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் தெலுங்கு, இந்தி, ஆங்கில படங்களுக்கு தமிழ் பின்னணி குரல் கொடுக்கிறார், இதில் மார்வெல் காமிக்ஸ் யுனிவர்ஸ் படங்களான டெட்பூல் , ஆண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப், எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. பெருவெற்றி தெலுங்குத் திரைப்பட மாவீரன் படத்தின் தமிழ் மொழியாக்கத்தில் பின்னணி குரல் கொடுத்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியான சாருக் கான் தொகுப்புரை வழங்கிய இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான கௌன் பனேகா குரோர்பதி பருவம் 2 ஐ இவர் தமிழில் குரல் கொடுத்து மொழியாக்கம் செய்தார்.[1] மேலும் இவர் கொடைக்கானல், என்னை அறிந்தால், அடங்க மறு உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
சேகர் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு அக்ஷாந்த் தேஜ் மற்றும் வில்வா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[1]
↑"தமிழக அரசின் திரை விருதுகள் அறிவிப்பு" [Tamil Nadu Government announces the State Film Awards] (in Tamil). filmibeat.com. 29 September 2009. Retrieved 18 May 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)