கொங்கணாபுரம்
அமைவிடம்கொங்கணாபுரம் பேரூராட்சிக்கு தெற்கே சேலம் 36 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 12 கி.மீ. தொலைவில் உள்ள மகுடஞ்சாவடியில் உள்ளது. இதன் மேற்கில் எடப்பாடி 10 கி.மீ.; வடக்கில் ஓமலூர் 34 கி.மீ., தெற்கில் ஈரோடு 36 கி.மீ. தொலைவிலும் உள்ளன. பேரூராட்சியின் அமைப்பு9.60 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,614 வீடுகளும், 9,286 மக்கள்தொகையும், கொண்டது.[5] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 11°35′N 77°55′E / 11.58°N 77.92°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 305 மீட்டர் (1000 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia