கோண்டு மக்கள்
கோண்டு மக்கள் அல்லது கோண்டி மக்கள் (Gondi or Gond) என்பவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசுகின்றனர். கோண்டி மக்கள் வாழும் பகுதியை கோண்ட்வானா என அழைப்பர். பில் மற்றும் சந்தேலர்கள் போன்று கோண்டு மக்கள் மத்திய இந்தியாவில் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட பழங்குடி மக்கள் ஆவார். மத்திய இந்தியாவின் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், கிழக்கு மகாராஷ்டிரத்தின் விதர்பா, [1]சத்தீஸ்கர், தெற்கு ஜார்கண்ட், தெற்கு உத்தரப் பிரதேசம், வடக்கு தெலங்கானா, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு ஒடிசாவில் வாழ்பவர்கள். கோண்டி பழங்குடி மக்கள் பேசும் மொழியான கோண்டி மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தாகும்.[2] வடக்கு ஆந்திரம், தெற்கு உத்தரப் பிரதேசம், தெற்கு பிகார், சத்தீஸ்கர், கிழக்கு குஜராத், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், கிழக்கு மகாராஷ்டிரம், வடக்கு தெலங்கானா, மேற்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கோண்டி மக்களை பட்டியல் பழங்குடி இன மக்களாக வகைப்படுத்தியுள்ளன்ர்.[3] மொழிகோண்டு மக்கள் பேசும் கோண்டி மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு மொழியின் தாக்கம் கொண்டது. கோண்டு மக்களில் பெரும்பாலனவர்கள் கோண்டி மொழியினையும்; பிறர் இந்தி போன்ற இந்தோ - ஆரிய மொழிகளையும் பேசுகின்றனர். 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோண்டி மக்கள் தொகை 9.3 மில்லியனாக இருந்தது. [4]2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோண்டி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் உயர்ந்து மக்கள் தொகை கிட்டத்தட்ட 11 மில்லியனை தொட்டது. சிவப்பு தாழ்வாரம்கோண்டு மக்கள் வசிக்கும் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நக்சலைட் - மாவோயிஸ்ட்டு போராளிகளின் கிளர்ச்சி அதிகரித்துள்ளது.[5] சத்தீஸ்கர் அரசு அமைதிப் பேரணி (Salwa Judum) எனும் பெயரில் கோண்டி மக்களை, நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளுக்கு எதிராக கேடயமாக பயன்படுத்துகிறது. தொழில் & கலாச்சாரம்கோண்டி மக்கள் பரம்பரையாக வேளாண்மைத் தொழில் செய்பவர்கள்; சிலர் கால்நடை வளர்க்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த கோண்டு மக்கள் நீத்தார் வழிபாடு மற்றும் பல கடவுள் வழிபாடு செய்பவர்கள். பல வண்ண ஓவியங்களை வரைவதில் வல்லவர்கள். இவர்களது ஓவியக்கலை கோண்டு ஓவியக்கலை என அழைக்கப்படுகிறது. இந்திய அரசு கோண்டு மக்களை பட்டியல் பழங்குடி மக்கள் பிரிவில் சேர்த்துள்ளதால், கோண்டு இன மக்களுக்கு அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. வரலாறுகோண்ட்வானா நாடு![]() 16-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு முடிய மத்திய இந்தியாவில் கோண்டு மக்கள் கர்கா-மண்டலம், தேவகாட், சண்டா மற்றும் கேர்லா (Garha-Mandla, Deogarh, Chanda, and Kherla) என நான்கு நாடுகளை கோண்ட்வானா மன்னர்கள் ஆண்டனர். கோண்ட்வானா மன்னர்கள் தாங்கள் ஆண்ட பகுதிகளில் 53 கோட்டைகள், அரண்மனைகள், கோயில்கள், குளங்கள், ஏரிகள் கட்டினர்.[6] 1548-இல் கோண்ட்வானா மன்னர் தல்பத் ஷா இறந்த பிறகு, அவரது சிறு குழந்தை பீர் நாராயண் ஆட்சிக்கு அமர்த்தப்பட்டார். ராணி துர்காவதி, தனது மகனுக்குத் துணையாக 1548 முதல் 1564 வரை பதினாறு வருடங்கள் ஆட்சியை நடத்தினார். 1564 ஆம் ஆண்டில் அக்பர் கோண்ட்வானா நாட்டை கைப்பற்றினார். [7] முகலாயர் மற்றும் மராத்தியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர், 1740-இல் மால்வா நாட்டை கோண்ட்வானா மன்னர்கள் கைப்பற்றி ஆண்டனர்.[8] கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி மற்றும் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் கோண்டு மன்னர்கள் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டனர். கோண்ட்வானா நாடு என்பது மத்தியப் பிரதேசத்தின் தற்கால சாகர் மாவட்டம், தமோ மாவட்டம், மண்டலா மாவட்டம், சியோனி மாவட்டம், உமாரியா மாவட்டம், நர்மதா மாவட்டம் மற்றும் போபால் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும். புகழ் பெற்ற கோண்டு மக்கள்இதனையும் காண்கபடக்காட்சியகம்
மேற்கோள்கள்
காணொளிக் காட்சிகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia