நர்மதா மாவட்டம்![]() ![]() ![]() நர்மதா மாவட்டம் (Narmada district) இந்தியாவின், குஜராத் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் ஒன்று. இது மத்திய குஜராத்தில் அமைந்துள்ளது. இம் மாவட்டத் தலைமையகம் ராஜ்பிப்லா நகராகும்.[1]. மாவட்டத்தின் பரப்பளவு 2,755 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 5,90,379 . [2] குஜராத்தில் மக்கட்தொகை கொண்ட மாவட்டங்களில் இது மூன்றாவதாகும்.[3] அமைவிடம்வடக்கே வதோதரா மாவட்டம், கிழக்கே மகாராஷ்டிர மாநிலம், தெற்கே தபி மாவட்டம், மேற்கே பரூச் மாவட்டம் எல்லைகளாக கொண்டமைந்துள்ளது நர்மதா மாவட்டம். வரலாறுவதோதரா மாவட்டம் மற்றும் பரூச் மாவட்டம் ஆகியவற்றின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் 2 அக்டோபர் 1997இல் உருவானது.[4] வருவாய் வட்டங்கள்நர்மதா மாவட்டம் ஐந்து வட்டங்களைக் கொண்டது.[5]
பொருளாதாரம்2006இல் இந்திய நடுவண் அரசின், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவித்த இந்தியாவின் 640 மாவட்டங்களில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்ட 250 மாவட்டங்களில் நர்மதா மாவட்டமும் ஒன்று.[6] மக்கள் வகைப்பாடு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 590,379.[3] மக்கட்தொகை அடர்த்தி, ஒரு சதுர கி.மீட்டருக்கு 214 நபர்கள். பாலினவிகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள். எழுத்தறிவு விகிதம் 73.29%. [3] சுற்றுலாத் தலங்கள்இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia