கோத்தா
கோத்தா (மலாய்; ஆங்கிலம்: Kota; சீனம்: 科塔) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரெம்பாவ் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள். மலேசிய கூட்டரசு சாலை 1 (Malaysia Federal Route 1) வழியில் இந்த சிறுநகரம் அமைந்துள்ளது. இந்த சிறிய நகரத்தில் கம்போங் லெகோங் உலு, கம்போங் காடோங், கம்போங் ஸ்ரீ கென்டாங், கம்போங் சாவா ராஜா; மற்றும் மேலும் சில கிராமங்கள் உள்ளன. பொது1960-களில் இங்கு ஒரு தொடருந்து நிலையம் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் கம்யூனிஸ்டு ஆதரவாளர்களால் அங்கு நடந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலின் போது அந்தத் தொடருந்து நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது. அந்த நிகழ்விற்கு ’13 நாள் பயங்கரவாதம்’ (13 Days of Terror) என்று பெயர். பழைய தொடருந்து நிலையம் இருந்த இடத்தில் தற்போது புதிதாக ஒரு தொடருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.[1] மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia