ரொம்பின்
ரொம்பின் (மலாய்; ஆங்கிலம்: Rompin; சீனம்: 峇都基基; ஜாவி: اتو كيكير) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், செம்போல் மாவட்டத்தில், மூவார் ஆற்றின் கரையில் அமைந்து உள்ள ஒரு நகரம். கிம்மாஸ் மற்றும் பகாவ் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ரொம்பின் நகரம் அருகிலுள்ள உள்ளூர் சமூகத்திற்கான ஒரு நகரமாக உருவானது.[1] ரொம்பின் நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள் கம்போங் பாரு ரொம்பின், கம்போங் ரொம்பின், கம்போங் பாலாய் சீனா மற்றும் கம்போங் தானா பஞ்சிஸ். புக்கிட் பிலா தோட்டம் மற்றும் நியூ ரொம்பின் தோட்டம் போன்ற அருகிலுள்ள தோட்டங்களின் மையமாகவும் ரொம்பின் நகரம் விளங்குகிறது. பொதுரொம்பின் நகரில் உள்ள பொது வசதிகளில் அஞ்சல் அலுவலகம், மசூதி, காவல் நிலையம், ரொம்பின் தேசியப் பள்ளி, தமிழ்ப் பள்ளி மற்றும் சீனப் பள்ளி ஆகியவை அடங்கும். 1 மலேசியாவின் பாணியில் பல்வேறு சமூங்களைச் சேர்ந்த மக்களும் ரொம்பினில் வசிக்கின்றனர்.[2] அருகாமை நகரங்கள்ரொம்பின் தமிழ்ப்பள்ளிகள்நெகிரி செம்பிலான்; செம்போல் மாவட்டத்தின் ரொம்பின் பகுதியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 168 மாணவர்கள் பயில்கிறார்கள். 38 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia