சிலியாவ்
சிலியாவ் என்பது (மலாய்: Siliau; ஆங்கிலம்: Siliau; சீனம்: 西廖) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு நகரம்.[1] சிரம்பான் நகரில் இருந்து 28 கி.மீ; போர்டிக்சன் நகரில் இருந்து 18 கி.மீ; ரந்தாவ் நகரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. சிலியாவ் புறநகர்ப்பகுதி எண்ணெய் பனை தோட்டங்களினால் சூழப்பட்டுள்ளது. [2] சிலியாவ் பகுதியில் நிறைய எண்ணெய் பனை தோட்டங்கள் இருப்பதால், தமிழர்களின் நடமாட்டமும் அதிகமாகக் காணப் படுகிறது. தமிழர்கள் 1850-ஆம் ஆண்டுகளில் குடியேறினார்கள். முதன்முதலில் மலாயாவில் தமிழர்கள் குடியேறிய பகுதிகளில் இந்தப் பகுதியும் ஒன்றாகும்.[3][4] தமிழ் எழுத்தாளர்கள்; கவிஞர்கள் பலரை உருவாக்கிய பெருமை இந்த இடத்திற்கு உண்டு. வரலாறு1850-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் நூற்றுக் கணக்கான கரும்பு, காபி, மிளகு தோட்டங்கள் தோற்றுவிக்கப் பட்டன. பெரும்பாலான தோட்டங்கள் பினாங்கு; செபராங் பிறை; பேராக் கிரியான், நெகிரி செம்பிலான் பகுதிகளில் இருந்தன. கரும்பு தோட்டங்கள் தான் மிகுதி. இந்தத் தோட்டங்கள் மலாயாவிலேயே மிக மிகப் பழமையான தோட்டங்கள். ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் கரும்புத் தோட்டங்கள் தான் மலாயாவில் பிரதான தோட்டங்களாக இருந்தன. 1896-ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் ரப்பர் தோட்டங்கள் உருவாகின. ஆயிரக்கணக்கான, இலட்சக் கணக்கான தமிழர்கள் வேலை செய்து இருக்கிறார்கள்.[5] சிலியாவ் புறநகர்ப் பகுதியில் தமிழ்ப்பள்ளிகள்சிலியாவ் புறநகர்ப் பகுதியில் 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 165 மாணவர்கள் பயில்கிறார்கள். 38 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
ஸ்ரீ முருகன் ஆலயம் சிலியாவ்![]() சிலியாவ் இரயில் நிலையத்திற்கு அருகில் சிலியாவ் ஸ்ரீ முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வாழ்ந்து வரும் இந்துக்கள் ஆலயத்தைப் பராமரித்து வருகிறார்கள். 1970-ஆம் ஆண்டு முதல் முருகனின் கார்த்திகை திருவிழாவை விமரிசையுடன் கொண்டாடி வருகிறார்கள்.[11] 1967-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரயில்வே நிலத்தில், மலாயா இரயில்வே அதிகாரியாக பணியாற்றிய எஸ். ராமையா என்பவரின் தலைமையில் இந்த ஆலயம் தொடங்கப்பட்டது. எஸ்.எஸ். பக்கிரிசாமி என்பவரும் இந்த ஆலயத்தின் நற்பணிகளுக்கு தலைமை தாங்கி உள்ளார். 1987-ஆம் ஆண்டில், மறைந்த முருக பக்தர் கிருபானந்த வாரியார், இந்த ஆலயத்திற்கு வருகை தந்து சொற்பொழிவுகள் ஆற்றி உள்ளார். 1997-ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின் செயலாளர் செல்வராஜ். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia