ரெப்பா
ரெப்பா என்பது (மலாய்: Repah; ஆங்கிலம்: Repah; சீனம்: 雷帕) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தம்பின் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம்; ஒரு முக்கிம் ஆகும்.[1] நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 62 கி.மீ. தொலைவிலும்; கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 125 கி.மீ. தொலைவிலும்; தம்பின் நகரத்திற்கு மிக அருகாமையில் அமைந்து உள்ளது. மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ரெப்பா நகரமும் ஒன்றாகும். ரெப்பா சுற்றுவட்டார மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 17.60% ஆகும். 2008-ஆம் ஆண்டில் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை, கடந்த 15 ஆண்டுகளாக இந்தியர்களின் கைவசம் உள்ளது. ரெப்பா சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வீரப்பன் சுப்பிரமணியம் பணியாற்றி வருகிறார்.[2] நகர்ப்பகுதிகள்
ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிநெகிரி செம்பிலான், ரெப்பா வட்டாரத்தில் 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. 40 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia