தெலுக் செம்படாக்
தெலுக் செம்படாக் (மலாய் மொழி: Teluk Cempedak; ஆங்கிலம்: Teluk Cempedak; சீனம்: 直落尖不达) என்பது மலேசியா, பகாங், குவாந்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம். மலேசியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கடற்கரை நகரங்களில் இந்த நகரமும் ஒன்றாகும். குவாந்தான் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்தக் கடற்கரை நகரம் உள்ளது.[1] அழகுமிகு பனை கடற்கரை என்று அழைக்கப்படும் இந்தக் கடற்கரை தென்சீனக் கடலை எதிர்நோக்கியவாறு அமைந்து உள்ளது. மலேசியர்களால் நன்கு அறியப்பட்ட இடமாகவும் கருதப்படுகிறது. மலேசியாவின் இயறகைச் சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்றாகும். பெசேரா Beserah நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்தக் கடற்கரை நகரம் உள்ளது.[1] பொதுஇந்தக் கடற்கரைக்கு சற்ரு அப்பால் செராத்திங் கடற்கரைகள் உள்ளன. பகாங் மாநிலத்தின் பெரும்பாலான கடற்கரைகள் இந்தப் பகுதியில் தான் உள்ளன. அத்துடன் பகாங்கில் புகழ்பெற்ற செண்டோர் கடற்கரை மிக அருகில் உள்ளது. தெலுக் செம்படாக்கில் உள்ள கடற்கரைகள்; தங்கும் விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகள் போன்றவை பிரபலமான சுற்றுலா இடங்களாகக் கருதப் படுகின்றன. பனை மரங்கள் சூழ்ந்த வெள்ளை கடற்கரையுடன், விருந்தினர் மாளிகைகள், தங்கும் விடுதிகள் மற்றும் சிறு சிறு கடைகளைக் கொண்டது இந்த தெலுக் செம்படாக் கிராமம். தீபகற்ப மலேசியாவில் மிகவும் விரும்பப்படும் கடலோர கடற்கரைகளில் தெலுக் செம்படாக் ஒன்றாகும். அருகிலுள்ள தீவுகளான பெர்கெந்தியான் தீவு, லாங் தெங்கா தீவு மற்றும் ரெடாங் தீவு ஆகியவற்றில் சுற்றுலாத் தொழில் தொடங்குவதற்கு முன்பே, தெலுக் செம்படாக் கடற்கரை; சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக விளங்கியது.[2] காட்சியகம்மேற்கோள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia