கோலா தெம்பிலிங்
கோலா தெம்பிலிங் (ஆங்கிலம்: Kuala Tembeling; மலாய்: Kuala Tembeling; சீனம்: 瓜拉淡贝林); என்பது மலேசியா, பகாங் மாநிலம், ஜெராண்டுட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். ஜெராண்டுட் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசிய தேசியப் பூங்காக்களில் மிக முக்கியமான தாமான் நெகாரா (Taman Negara) பூங்காவிற்குச் செல்லும் நுழைவாயில் நகரமாக கோலா தெம்பிலிங் விளங்குகிறது. அத்துடன் தீபகற்ப மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரின் (Titiwangsa Mountains Range) அடிவாரத்தில், சில கி.மீ. அப்பால் இந்த நகரம் அமைந்துள்ளது.[2] பொதுதெம்பிலிங் ஆறு (Tembeling River) மற்றும் ஜெலாய் ஆறு (Jelai River) ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கோலா தெம்பிலிங் அமைந்துள்ளது. கோலா தெம்பிலிங்கில் உள்ள படகுதுறை மூலமாக தாமான் நெகாராவிற்குச் செல்லும் மாற்று இடமாகவும் (Transfer Point) செயல்படுகிறது.[3] இந்த படகுதுறை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் தெம்பிலிங் ஆற்றின் அழகிய இயற்கைக் காட்சிகளை அனுபவிக்க விரும்புகிறார்கள். இந்த படகுத் துறையில் இருந்து தாமான் நெகாராவை சுமார் 2 - 3 மணிநேர படகுப் பயணத்தின் மூலமாகச் சென்று அடையலாம்.[4] தாமான் நெகாராதாமான் நெகாரா 4,343 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. உலகிலேயே மிகப் பழைமையான வெப்ப மண்டல மழைக்காடுகளைக் கொண்ட வனப்பூங்கா என்றும் புகழ்பெற்றது. இந்தக் காடுகள் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.[5] 1938 - 1939-ஆம் ஆண்டுகளில், இந்த வனப் பூங்காவிற்கு கிங் ஜார்ஜ் V தேசியப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. மலேசியா விடுதலை அடைந்த பின்னர், தாமான் நெகாரா என்று பெயர் மாற்றம் கண்டது. தாமான் (Taman) என்றால் மலாய் மொழியில் பூங்கா அல்லது வனம்; நெகாரா (Negara) என்றால் நாடு என்று பொருள்படும். மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia