சமாரியம்(III) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் சமாரியம்(III) பெர்குளோரேட்டு கிடைக்கிறது.[3] வீழ்படிவாகக் கிடைக்கும் நீரேற்றை இருகுளோரின் ஆறாக்சைடுடன் சேர்த்து நீர்நீக்க வினைக்கு உட்படுத்தினால் நீரிலி வடிவ சமாரியம்(III) பெர்குளோரேட்டு கிடைக்கும்.[1]
பண்புகள்
P63/m என்ற இடக்குழுவுடன் a=9.259 Å, c=5.746 Å, Z=2 என்ற அலகுசெல் அளவுருக்களுடன் நீரற்ற சமாரியம்(III) பெர்குளோரேட்டு அறுகோணப் படிகங்களாக உருவாகிறது.[4] அம்மோனியம் தயோசயனேட்டு மற்றும் 1-பியூட்டைல்-3-மெத்தில் இமிடாசோலியம் தயோசயனேட்டு ([BMIM]SCN) உடன் முழுமையான எத்தனாலில் வினைபுரிந்து அயனி திரவத்தை [BMIM]4[Sm(NCS)7(H2O)] கொடுக்கிறது.[5]
மேற்கோள்கள்
↑ 1.01.1Favier, Frédéric; Pascal, Jean-Louis (1992). "Synthesis and structural analysis of a homogeneous series of anhydrous rare-earth-metal perchlorates" (in en). Journal of the Chemical Society, Dalton Transactions (13): 1997–2002. doi:10.1039/dt9920001997. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-9246.
↑Pascal, J.L.; Favier, F.; Cunin, F.; Fitch, A.; Vaughan, G. (Sep 1998). "Crystalline and Molecular Structures of Anhydrous Lanthanide PerchloratesLn(ClO4)3 with Ln=La, Ce, Pr, Sm, Eu, Ho, Er, Tm, and Lu" (in en). Journal of Solid State Chemistry139 (2): 259–265. doi:10.1006/jssc.1998.7838. Bibcode: 1998JSSCh.139..259P.
↑Nockemann, Peter; Thijs, Ben; Postelmans, Niels; Van Hecke, Kristof; Van Meervelt, Luc; Binnemans, Koen (2006-10-01). "Anionic Rare-Earth Thiocyanate Complexes as Building Blocks for Low-Melting Metal-Containing Ionic Liquids" (in en). Journal of the American Chemical Society128 (42): 13658–13659. doi:10.1021/ja0640391. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:17044672.